12 | சுரும்பிமிர் பூங்கோதை யந்நல்லா யானின் றிருந்திழை மென்றோ ளிழைத்தமற் றிஃதோ கரும்பெல்லா நின்னுழ வன்றோ வொருங்கே துகளறு வாண்முக மொப்ப மலர்ந்த குவளையு நின்னுழ வன்றோ விகலி முகைமாறு கொள்ளு மெயிற்றா யிவையல்ல வென்னுழுவாய் நீமற் றினி; | 19 | எல்லா, நற்றோ ளிழைத்த கரும்புக்கு நீகூறு முற்றெழி னீல மலரென வுற்ற விரும்பீர் வடியன்ன வுண்கட்கு மெல்லாம் பெரும்பொன்னுண் டென்பா யினி; | 23 | நல்லா யிகுளைகேள்; ஈங்கே தலைப்படுவ னுண்டான் றலைப்பெயின் வேந்துகொண் டன்ன பல; | 26 | ஆங்காக வத்திற மல்லாக்கால் வேங்கைவீ முற்றெழில் கொண்ட சுணங்கணி பூணாகம் பொய்த்தொருகா லெம்மை முயங்கினை சென்றீமோ முத்தேர் முறுவலாய் நீபடும் பொன்னெல்லா முத்தி யெறிந்து விடற்கு. |
இஃது அருமைசெய்தயர்த்த தலைவன் வந்துழித் தலைவி எள்ளின இடத்துத் தலைவன் அவளோடு உறழ்ந்துகூறி நகையாடிக்கூட்டத்திற்கு உடம்படுவித்தது. இதற்கு விதி ‘உயர்மொழிக்குரிய வுறழுங் கிளவி’ (1) என்பதனுள், தலைவன் உயர்மொழிக்குத் தலைவி உறழ்ந்து கூறுமென்றாம். இதன் பொருள். அணி(2) முக மதியேய்ப்ப வம்மதியை நனியேய்க்கு மணிமுக மாமழைநின் பின்னொப்பப் பின்னின்கண் |
1, தொல். பொருளி. சூ. 44. இச்சூத்திரவுரையில் இவர் கூறியது, “அணிமுக......................விடற்கு; இது தலைவன் உயர்மொழிக்குத் தலைவி உறழ்ந்து கூறியது. இது நகையாடிக் கூட்டத்தை விரும்பிக் கூறிய மொழிக்கு உறழ்ந்துகூறலின் வழுவாய் அவளும் நகையாடிக் கூறலி னமைந்தது” என்பது 2. “திங்கண் முகிலோடுஞ் சேணிலங்கொண்டென;....................முகத்திற்கும் குழலுக்கும் திங்களும்புயலும் உவமை” சிலப். 18 : 31.
|