விரிநுண்ணூல் சுற்றிய வீரித ழலரி யரவுக்கண் ணணியுற ழாரன்மீன் றகையொப்ப வரும்படர் கண்டாரைச் செய்தாங் கியலும் விரிந்தொலி 1கூந்தலாய் கண்டை யெமக்குப் பெரும்பொன் படுகுவை பண்டு |
எ - து; நினது அழகினையுடைய முகம் மதியையொப்ப, மணிகள்விளங்கும் நின்பின்னின் மயிர் அம்முகத்துக்கொப்பாகியமதியை மிகவும்பொருந்துங் கருமையையுடைய மழையையொப்ப, அப்பின்னின் மயிர்க்கண்ணே கிடந்து அலர்ந்த நுண்ணிய நூலாற் கட்டின தேனால் ஈரமான இதழையுடைய பூக்கள் (1)பின்னுக்கொப்பாகிய கரும்பாம்பிடத்தே கிடந்து அதன் கரிய நிறத்தோடே மாறுபடுகின்ற கார்த்திகையென்னும் மீனினது அழகையொப்ப, மனத்தான் ஒப்புக்கண்டவர்களை அவ்விடத்தே அரிய வருத்தத்தைச் செய்து போகின்ற பரந்து தழைத்த கூந்தலையுடையாய்! நீ என்னை எள்ளும் நிலைமையைக் கைவிட்டு யான் கூறுகின்றதனை மனத்தான் ஆராய்ந்து2பார்; நீ பண்டு எம் பொருட்டுப் பெரிய 3பொன்னுண்டாவை ; எ - று. இது முன் நீ இடைவிடாமற் (2) கூடிய கூட்டத்தால், தோற்றப்பொலிவு எய்தினையெனக் கூறி, ஈண்டு நிகழ்ந்த அருமைசெய்தயர்த்ததனாற் பிறந்த வருத்தத்தை நீக்கிற்றாம்; அஃது எமக்கு நீபெரிய பொன்கடவையென்பதோர் நகைப்பொருளுந் தோன்ற நின்றது. அலரி பூவென்னுமாத்திரையாய் நின்றது, ஒப்பவென்னுஞ் செயவெெனெச்ச உவமவுருபுகள் கண்டாரென்னுந்தொழிற் பெயரிற் றொழிலொடு 4முடிந்தன. 8 | ஏஎ! எல்லா, மொழிவது கண்டை (3) யிஃதொத்தன் றொய்யி லெழுதி யிறுத்த பெரும்பொன் படுக முழுவ துடையமோ 5யாம். |
1. (அ) “கோளுண்ட திங்கண் முகத்தாள்” கம்ப. பூக்கொய். 14. (ஆ) “பின்னும் வேணிவார் குழலெனுங் கரியபே ரரவம்” பிரபுலிங்க. மாயைபூசை. 7. 2. “தேசு மொளியுந் திகழ நோக்கி” (பரி. 12: 21.) என்புழி ‘தேசு - செயற்கை யழகு, ஒளி - கலவியால்வந்த நிறம்’ என்று எழுதியிருக்கும் உரையும் இந் நூற்பக்கம் 212 : 1-ஆங் குறிப்பில் இவ்விடத்திற்குப் பொருந்துவனவும் ஒப்புநோக்குக. 3. (அ) இஃதொத்தன் கலி. 60 ; 9, 61 ; 1, 62 : 1, 84 : 18. 88 : 10, 103 : 31, 138 : 10. (ஆ) இஃதொத்தன் என்பதை இடைச்சொல் (பிரதிபேதம்)1கூந்தல் கண்டை, 2பாரதுநீ, 3பொன்னுண்டாவை. என்றான் என்றது முன்நீர் இடைவிடாமல், 4முடிந்தன ஏஎ இகழ்ச்சிக்குறிப்பு எல்லா, 5யாம் உழுதாய் எ - து: இவன்.
|