1வருத்த முற்ற (1) இரும்பு ஈர்வடியன்ன உண்கட்கும் மற்றுமுள்ள எல்லா உறுப்புக்கட்கும் பெரிய பசப்புண்டென்று சொல்லுவாயாக; 2எ-று. இதனால் அவன் அருமைசெய்தயர்த்திலேனென்றதற்கு அக்காலமெல்லாம் யான் வருத்தமுற்றேனென்றாளாயிற்று. கரும்பு அவயவமன்றி எழுதப் பட்டதாகலின், தோற்றப்பொலிவு உண்டென்றாள். கூட்டத்தாற் பொலிவு பெறாது இளமைப்பருவத்தும் இரும்புஈர்ந்த (2)வடுவகிரை யொத்திருத்தலுளதாகலின் இரும்பீர்வடியன்ன வுண்கட்குமென்றாள். இது கண்ணென்னும் பெயர்மாத்திரையாய் நின்றது. இதனால் அவன் அருமைசெய்தயர்த்திலே னென்றுநன்றாகக் 3கூறிய (3) பொன்னிறத்தைப்பசப்பாக்கி அக்காலமெல்லாந் தான் வருந்தும்படி தன் நலத்தை அவன்கொண்டமை கூறினாளாயிற்று. 23 | நல்லா யிகுளைகேள்; ஈங்கே தலைப்படுவ னுண்டான் றலைப்பெயின் வேந்துகொண் டன்ன பல |
எ-து : அதுகேட்டதலைவன் நல்லாய்! 4இகுளையே! யான்கூறுகின்றதனைக் கேள்; அரசனைச் சேர்ந்து அவன் செல்வத்தை நுகர்ந்தானொருவன் அவன் வயத்தனாய்நின்று காரியத்தாற் றலைமைப்பாடு எய்துவனாயின், அவ்வேந்தன் அவனாலுள்ள பயனைக்கொண்டாற் போன்ற பலபயனையும் யான் இவ்விடத்தே எய்துவேனென்றான்; எ - று.
1. (அ) ”இரும்புமேல் விடாது நிற்பார்” (ஆ) “இரும்பு மேய்ந்தொழிந்த மிச்சில்வரை மார்பன்” (இ) “இரும்புண்டு மிகுத்த மார்பின்” (ஈ) “இரும்பெச்சிற் படுத்த மார்பின்” சீவக. 782, 1790, 2281, 2352. 2. (அ) ”வடிக்கணிவை” (கோவையார். 32) என்பதற்கு வடுவகிர்போலுங் கண்களும் இவையே என்று பொருள் கூறி ‘வடியென்பதுவடுவகிருக்கு ஓர் பெயர்’ என்று எழுதியிருக்கும் பொருள்விளக்கம் இங்கே அறிதற்பாலது. இச்சொல் வடுவகிருக்கேயன்றி வடுவுக்கும்பெயராய்வழங்கும்; அதனை “நறுவடி மாவின் பைந்துண் ருழக்கி” (கலி. 41 : 14.) என்பதனானும் அதன்குறிப்பாலும். (ஆ) “கொக்கி னறுவடிவிதிர்த்த” பெரும்பாண். 309) (இ) “நறுவடிமாவின்” (மலை. 512.) என்பவற்றாலும் உணர்க வடுவகிரென்னும் பொருளில் வடுவென்பதும் வரும். 3. (அ) “பூப்போ லுண்கண் பொன்போர்த் தனவே” (ஆ) “மேனி பொன்போற் செய்யு மூர்கிழவோனே ஐங். 16. 41. என்பவைகளும் (இ) “வயங்கு பொன்னீன்ற” (சீவக. 1530) என்புழி, ‘பொன் - பசப்பு’ என்று எழுதியிருக்கும் விளக்கமும் இங்கே அறிதற்பாலன. (பிரதிபேதம்)1வருத்தமுற்றஉண்கட்கு, 2என்றான் இதனால், 3கூறியன பென்னிறத்தை யொப்பப் போக்கியகாலமெல்லாம், 4இளையோளே.
|