என்றது கூட்டத்தாற் செயற்கைநலம்பெற்ற நின்னை வரைந்துகொண்டு நின்னாற் பெறும் பயனெல்லாங் கொள்வேனென்றதாம். இனி அரசனுடைய பொருளை நுகர்ந்தவன் எதிர்ப்படில் அவ்வரசன் அவனிடத்து வருத்தமுறுத்திக் கொண்டாற்போன்ற பலபயன்களையும் யானும் இங்கே கொள்வேனென ஒரு நகைக்குறிப்புத்தோன்றி 1நின்றது. 26 ஆங்காக எ-து: அதுகேட்ட தலைவி நீ அருமைசெய்தயர்த்ததனைப் பொய்யாக்கி அன்பின்றி நின்றதன்மை நீங்கி எம்மிடத்து அன்புடையையான காலத்து நீ கூறியவாறே ஆவதாகவென உடம்பட்டுக்கூறினாள்; எ - று. அத்திற மல்லாக்கால் (1) வேங்கைவீ முற்றெழில் கொண்ட சுணங்கணி பூணாகம் பொய்த்தொருகா லெம்மை முயங்கினை சென்றீமோ (2)முத்தேர் முறுவலாய் நீபடும் பொன்னெல்லா முத்தி யெறிந்து 2விடற்கு. |
1. (அ) “ஓதி, நளிச்சினை வேங்கை நாண்மலர் நச்சிக், களிச்சுரும்பரற்றுஞ் சுணங்கிற் சுணங்கு பிதிர்ந்து, ..................பூணகத் தொடுங்கிய வெம்முலை” சிறுபாண். 22 - 26; (ஆ) “வேங்கை வென்ற சுணங்கின்” ஐங். 324; (இ) “வேங்கை, யூழுறு நறுவீ கடுப்பக் கேழ்கொள, வாகத் தரும்பிய மாசறு சுணங்கின்” (ஈ) “பொன்வீ வேங்கைப் புதுமலர்புரைய, நன்னிறத்தெழுந்த சுணங்கணி வனமுலை” அகம். 174 ; 10 - 12, 319; 8 - 9; (உ) “நாகிள வேங்கையிற், கதிர்த்தொளி திகழு நுண்பல்சுணங்கின், மாக்கண்மலர்ந்தமுலையள்” புறம். 352. 12 - 14; (ஊ) “குறமனைவேங்கைச் சுணங்கொ டணங்கலர் கூட்டுபவோ" கோவையார். 96 (எ) “வாரிரு புடையும் வீக்கி வடஞ்சுமந்தெழுந்து வேங்கை, யேரிருஞ் சுணங்கு சிந்தி யெழுகின்ற விளமென் கொங்கை” (ஏ) “நறவேங்கை யவிர்சுணங்கின் மடவார்” சூளா. சீய. 188, கல்யாண. 208; (ஐ) “முலைத்தலைச் செஞ்சுணங்கு வேங்கை மலரோடலைத்தன வம்பொற்பிதிர்” யா - வி. சூ. 84. மேற்கோள். (ஒ) “அணங்கரவல்கு லரிவையராரத் தனமருப்புச், சுணங்கலர் வேங்கைத் துணர்மலை நாட அம்பிகா. 335. 2. (அ) “முத்தேர் முறுவலாய்” என்பது அன்னவை பிறவுமென்பதனாற் கொள்ளப்படும் உவமையுணர்த்துஞ்சொற்களுள் ஏர்வந்ததென்பதற்கும் (தொல். உவமை. சூ. 11. இளம்) (ஆ) உருவுபற்றிய பண்புவமத்தின் கண் ஏர் வந்ததென்பதற்கும் (இ - வி. சூ. 642,) மேற்கோள். (பிரதிபேதம்)1நின்றது அதுகேட்டதலைவி நீ அருமை ...................... உடம்பட்டுக்கூறினால் ஆங்காக, 2விடற்கு எ - து. அதுகேட்டதலைவன்.
|