10 | கோடெழி லகலல்குற் கொடியன்னார் முலைமூழ்கிப் பாடழி சாந்தினன் பண்பின்றி வரினெல்லா வூடுவே னென்பேன்ம னந்நிலையே யவற்காணிற் கூடுவே னென்னுமிக் கொள்கையி னெஞ்சே; |
14 | இனிப்புணர்ந்த வெழினல்லா ரிலங்கெயி றுறாஅலி னனிச்சிவந்த வடுக்காட்டி நாணின்றி வரினெல்லா துனிப்பேன்யா னென்பேன்ம னந்நிலையே யவற்காணிற் றனித்தே தாழுமித் தனியி னெஞ்சே: எனவாங்கு; |
19 | பிறைபுரை யேர்நுதா றாமெண்ணி யவையெல்லாந் துறைபோத லொல்லுமோ தூவாகா தாங்கே யறைபோகு நெஞ்சுடை யார்க்கு. |
இதுவாயின்மறுத்த தலைமகள் ஆற்றாமைவாயிலாகப்புக்குக்கூடிய தலைமகனது நீக்கத்துக்கட் புக்க தோழிக்குக்கூறியது. இதன் பொருள், கார்முற்றி யிணரூழ்த்த கமழ்தோட்ட (1)மலர்வேய்ந்து சீர்முற்றிப் (2) புலவர்வாய்ச் சிறப்பெய்தி யிருநிலந்
1. (அ) "மலரு, நாறுபு நிகழும் யாறுவர லாறு" (ஆ) "மாறுமென் மலருந் தாருங் கோதையும்...........மண்டி...........வேறா கின்றிவ் விரிபுனல் வரவென" (இ) "மலையி னிழியருவி மல்கிணர்ச் சார்ச்சார்க், கரைமரஞ் சேர்ந்து கவினிமடவார், நனைசேர் கதுப்பினுட்டண்போது மைந்தர், மலர்மார்பிற் சோர்ந்த மலரிதழ் தாஅய், மீனாரம் பூத்த வியன்கங்கை நந்திய, வானம்பெயர்ந்த மருங்கொத்த லெஞ்ஞான்றுந், தேனிமிர் வையைக் கியல்பு" பரி. 6: 41 - 2. 6: 46 - 50. 16. 32 - 38. (ஈ) "வையையென்ற பொய்யாக் குலக்கொடி,.............புண்ணிய நறுமல ராடை போர்த்து..............புனல்யா றன்றிது பூம்புனல் யாறென" சிலப். 13: 170 - 174. என்பவையும் (உ) "பூநி ரைத்து மென் றாது பொருந்தியும்,.........வான வில்லை நிகர்த்தது வாரியே" கம்ப. ஆற்று. 8 (ஊ) "கொங்கு லாமலர்க் கொன்றைகூ விளைகுர வுழிஞை, பொங்குமாசுணந் தாதகிபாடலம் புன்னை, துங்க மார்திருத் தலைமிசைக் கொண்டுறுந் தொடர்பா லெங்க, ணாயகன் றன்னையு மொத்ததவ் விருநீர்" கந்த. ஆற்றுப். 19 என்பவையும் ஒப்புநோக்குக. 2. (அ) "வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப, செய்யபரி பாடற்றிறம்" (ஆ) "புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி, வையை
|