(1) தார்முற்றி யதுபோலத் தகைபூத்த (2) வையைதன் (3) னீர்முற்றிமதில்பொரூஉம் பகையல்லா னேராதார் போர் (4) முற்றொன் றறியாத புரிசைசூழ் 1புனலூரன்
யென்ற பொய்யாக் குலக்கொடி" சிலப். 13: 169 - 170. என்பன ஈண்டறிதற் பாலன. 1. (அ) "மாநில மடந்தை.........................ஆரம் போலச், செல்புன லுழந்த சேய்வரற் கான்யாற்று" சிறுபாண். 1 - 3. ஆ) "ஆரப் பேரியாற்று...........................................மண்ணக மடந்தை" சிலப். 5 : 1 - 3. (இ) "காவிரி, மாதர்மண் மடந்தைபொன் மார்பிற் றாழ்ந்ததோ, ரோதநீர் நித்திலத் தாம மொக்குமால்" பெரிய. திருநாட்டுச். 2. 2. (அ) "அமிழ்த வெண்டிரை வையையு மொருபுறத் தகழாம்" (ஆ) (வையை) "கல்லென்றதிர் சும்மைப்புனல் கடிமாமதிற் புறம்போய்,..................புல்லும்புரி சையுந் தள்ளியுள் புகுகின்றதை யன்றே" திருவிளை. திருநகரப். 17. பரிநரி. 57 - 8. என்பனவும் (இ) "புனல் பொரு புதவி னுறந்தை" அகம். 237: 14. (ஈ) "புல்லிலை வஞ்சிப் புறமதி லலைக்குங், கல்லென் பொருநை" புறம். 387: 33 - 34. என்பனவும் (உ) "நிவந்துகரை யிழிதரு நனந்தலைப் பேரியாற்றுச், சீருடை வியன்புலம் வாய்பரந்து மிகீஇய, ருவலை சூடி யுருத்துவரு மலிர்நிறைச், செந்நீர்ப் பூச லல்லது, வெம்மை யரிதுநின் னகன்றலை நாடே" பதிற். 28: 10 - 14, என்பதும் (ஊ) "ஒருகொம் பானையு மொராயிரத் திரட்டிவெண் கோட்டுச்செருவின் வேழமுந் திரளிமிற் றருமவெள் ளேறும், பொருவி லோகையிற் பொருதி [ய](டப்) படுவதல் லாது, மருவ லார்களிற் பொருதிடப் படாததவ் வரையே" திருவானைக். புராணவரலாற்றுப். 9 என்பதும் (எ) "கோற்றொடிப் புரிசை முற்றிக் குளிர்நிழற் படப்பை சாய்த்துத், தோற்றிடு நாட்டிலுள்ள பல பொருள் சூறை யாடி, யேற்றம் ருடற்றும் வேந்தர் நாட்டினி லிகலி னோடும், வேற்றர சிறுத்தா லென்ன மேவும்வை தரணி யாறும்" கூர்ம. நவகண்டத் 35. என்பதும் இங்கே அறிதற்பாலன. 3. "அதிராச்சிறப்பின்மதுரைமூதூர்" என்பதற்கு, ‘பகைவரால் நடுக்க மில்லாத சிறப்பினையுடைய மதுரையாகிய மூதூர்’ என்று பொருள் கூறி அதற்கும், "முதிர்கடன் ஞாலம்" என்புழி ‘முதிர்தல்’ என்பதற்கு, ‘முற்றுதல், சூழ்தலுமாம்’ என்று பொருள்கூறி அதற்கும், "நீர்முற்றி மதில்பொரூஉம்" என்னும் பகுதியை மேற்கோள் காட்டினர், அடியார்க்கு நல்லார்; சிலப். பதிகம். 39, 2 : 30. 4. "முற்று - வளைத்தல்" பு - வெ. உழிஞை. 25. (பிரதிபேதம்) 1புனலூரான்
|