எ - து: ஏடீ ! எழிலையுடையவாகிய மையுண்கண்ணினையுடைய பரத்தையர்தங் கோதைகளாலே அடித்தநலத்தினையுடைய அழகினையும் (1)நகத்தாலும் எயிற்றாலும் அலைத்தபுண்களையும் (2) பூண்கள்பொறித்த வடுக்களையுங்காட்டி என்னிடத்து அன்பின்றி வருவானாயின் யான் புலப்பேனென்றிருப்பேன், அதனாற் பெற்றதென்? இச்செயலற்ற நெஞ்சு அவனைக்காணில் அத்தவறுகளோடு கூடிய அந்நிலைதன்னிலே யான் கூடுவேனென்று கூறாநிற்கும்; எ - று. 10 | கோடெழி லகலல்குற் (3)கொடியன்னார் முலைமூழ்கிப் பாடழி சாந்தினன் பண்பின்றி வரினெல்லா வூடுவே னென்பேன்ம னந்நிலையே யவற்காணிற் கூடுவே னென்னுமிக் கொள்கையி னெஞ்சே |
எ - து: ஏடீ ! பக்கமுயர்ந்த எழுச்சியையுடைய அகன்ற வல்குலையுடைய கொடியையொக்கும் பரத்தையர் முலைகள் அழுந்திப் பூசின பாடழிந்த சந்தனத்தையுடையனாய் நன்மக்கள் குணமின்றி வருவனாயின் ஊடியிருப்பேனென்று கூறுவேன், அதனாற்1 பெற்றதென்? யான் கூறியதனைக் கொள்ளுதலில்லாத இந்நெஞ்சு அவனைக் காணில் அத்தவறுகளோடு கூடிய அந்நிலைதன்னிலே யான்கூடுவேனென்று கூறாநிற்கும்; எ - று, 14 | இனிப்புணர்ந்த வெழினல்லா ரிலங்கெயி றுறாஅலி னனிச்சிவந்த வடுக்காட்டி நாணின்றி வரினெல்லா துனிப்பேன்யா னென்பேன்ம னந்நிலையே யவற்காணிற் றனித்தே தாழுமித் 2தனியி னெஞ்சே |
எ - து : ஏடீ! இப்பொழுது புதிதாகக் கூடிய அழகினையுடைய பரத்தையருடைய விளங்குகின்ற எயிறுகள் அழுந்துகையினாலே மிகுதியையுடைத்தாய்ச் சிவந்த வடுக்களைக் காட்டி நாணமின்றியே வரின். துனித்திருப்பேன் யான் என்று கூறுவேன், அதனாற் பெற்றதென்? 3இத்தனிமையான மனத்தைத் தனக்கு 4உரித்தாக்குதலில்லாத நெஞ்சு அவனைக்காணில் அத்தவறுகளோடு கூடிய அந்நிலைதன்னிலே என்னை நீக்கித் தான் அவனிடத்தேதாழும்; எ - று. உறாஅல், விகாரம்.
1. "பேணானென் றுடன்றவ ருகிர்செய்த வடுவினான், மேனாணின் றோள்சேர்ந்தார் நகைசேர்ந்த விதழினை" கலி. 72: 11-2. என்பதும் அதன் குறிப்பும் பார்க்க. 2. "தொடி வடுக்காணிய" கலி. 71: 16. என்பதும் அதன் குறிப்பும் ஈண்டறிதற் பாலன. 3. "அலமர லுண்கண்ணா ராய்கோதை குழைத்தநின், மலர்மார்பின் மறுப்பட்ட சாந்தம்வந் துரையாக்கால" கலி. 73. 12 - 3. என்பதும் அதன் குறிப்பும் ஈண்டு ஒப்புநோக்கற்பாலன. (பிரதிபேதம்) 1பெற்றதென் இந்தயான், 2தனிநெஞ்சே, 3இந்தத்தனிமனத்தை, 4உரிதாக்குதலில்லாத.
|