இத்தாழிசைமூன்றும் (1) மறுத்துரைப்பதுபோல் உவகைபற்றிக்கூறியன. "உடம்பு முயிரும் வாடியக் காலு, மென்னுற்றனகொ லிவையெனி னல்லது, கிழவோற் சேர்தல் கிழத்திக் கில்லை" (2) என்பதனால் இந்நெஞ்சிற்குத் தன்றன்மை1யென்பதொன்றன்றியது என்னென்றவாறு காண்க, 2எனவாங்கு எ-து. என்று; எ-று. ஆங்கு, அசை. 19 | பிறைபுரை 3யேர்நுதலா (3) யெண்ணியவை யெல்லாந் துறைபோத லொல்லுமோ தூவாகா தாங்கே (4) யறைபோகு நெஞ்சுடை யார்க்கு |
எ - து: பிறையையொத்த 4அழகினையுடைய நுதலினையுடையாய்! தமக்கு வலியாகாதே அவனிடத்தே கீழ் அற்றுச் செல்லும் நெஞ்சினையுடைய மகளிர்க்குத் தாம் நினைத்தவையெல்லாம் முடிவுபோதல் பொருந்துமோ? பொருந்தாதன்றே! என்றாள்: எ-று. இதனால், தலைவிக்கு இளிவுபிறந்தது. இது வெள்ளைச்சுரிதகத்தால் இற்ற ஒத்தாழிசைக்கலி. (2)
1. மறுத்துரைப் பதுபோல் உவகைபற்றிக் கூறியதற்கு, "கோடெழில் ................கொள்கையி னெஞ்சே" என்பது (தொல். பொருளி. சூ. 2, நச்.) மேற்கோளாகக் காட்டப்பெற்றுள்ளது. 2. "தொல். பொருளியல். சூ. 9. இச்சூத்திரத்தின் இவருரையில் இனிப்புணர்ந்த................நெஞ்சே" என்பது மேற்கோளாக "இதனுள் யான் துனித்தல் வல்லேன் என்னெஞ்சிற்குத் தன்றன்மை யென்பதொன்றில்லை; ஈதென் னென்றலின் அவ்வாறு காண்க" என்னும் குறிப்புக் காணப்படுகின்றது. 3. (அ) "நின்மார்பு தோயல மென்னு, மிடையு நிறையு மெளிதோநிற் காணிற், கடவுபு கைத்தங்கா நெஞ்சென்னுந் தம்மோ, டுடன்வாழ் பகையுடை யார்க்கு" கலி. 77: 21-4. (ஆ) “நின்றீமை, பொறையாற்றே மென்றல் பெறுதுமோ யாழ,நிறையாற்றா நெஞ்சுடை யேம்" கலி. 90; 27-9. 4. (அ) "நெஞ்சறை போகிய வறிவி னேற்கே" அகம். 26 : 26 (ஆ) "அறைபோய் நெஞ்ச மவன்பா லணுகினு, மிறைவளை முன்கை யீங்கிவன் பற்றினுந், தொன்று சாதலன் சொல்லெதிர் மறுத்த, னன்றி யன்றென நடுங்கினண் மயங்கி" மணி. 18 : 130-133.(இ) "நின்ற, (பிரதிபேதம்) 1என்பதொன்றின்றியது, 2எனவாங்கு ஆங்கசை, 3ஏர்நுதலராய்தாமெண்ணியயெல்லாம், ஏர்நுதாறாமெண்ணியவையெல்லாம்; 4அழகியநுதலினை.
|