| வொலிகொண்ட சும்மையான் மணமனை குறித்தெம்மிற் பொலிகெனப் புகுந்தநின் புலையனைக் கண்டயாம்; எனவாங்கு; | 21 | நனவினான் வேறாகும் வேளா முயக்க மனைவரிற் பெற்றுவந்து மற்றெந்தோள் வாட வினைய ரெனவுணர்ந்தா ரென்றேக்கற் றாங்குக் கனவினா னெய்திய செல்வத் தனையதே யைய வெமக்குநின் மார்பு. |
இது பரத்தையர் சேரியினின்றும் வந்த தலைவனொடு ஊடியகாமக் கிழத்தி தன்காதன்மிகுதி கூறி ஊடியவாறு கண்டு சென்று சார்ந்த தலைமகனுடன் ஊடல் தீர்கின்றாள்கூறியது. இதன் பொருள். (1) பொதுமொழி பிறர்க்கின்றி முழுதாளுஞ் செல்வர்க்கு . மதி1 மொழி யிடன்மாலை (2) 2வினைவர்போல் (3)வல்லவர்
1. (அ) "வையங்காவலர்வழிமொழிந்தொழுகப், போகம்வேண்டிப்பொதுச் சொற்பொறாஅ, திடஞ்சிறி தென்னு மூக்கந் துரப்ப, வொடுங்கா வுள்ளத்து.................சேரலாதனை" (ஆ) "வழுதி தண்டமிழ் பொதுவெனப் பொறாஅன்" புறம். 8: 1-5; 51; 4-5. (இ) “பெருநில முழுதாளும் பெருமகன்” சிலப். 1: 31. (ஈ) “ஞாலம் பொதுவெனப் பொறாவரசர்” குறள.் 492. பரி. (உ) "கோச்செங்கட் செம்பியர்கோன், பூவலயம் பொதுநீக்கி யாண்டருளி" பெரிய. கோச்செங்கட். 17.(ஊ) "உலகம்பொது வறநுான்முறை யோராழி செலுத்தி" கூர்ம. இந்திரத்துய்மன். 22. (எ) "நிலமுழு தாண்டநேமி, நாவிரிகீர்த்தியாளனளனெனு நாமவேந்தன்" வில்லி. அருச்சுனன்றவ. 24.(ஏ) "முழுதுலகம் பொதுநீக்கி முழுச்செங்கோல் செலுத்துநாள்"உத்தரகோச. அரித்துவசன் சாபந்தீர்த்த. 2. (ஐ) "கொடியு முரசுங் கொற்றவெண் குடையும், பிறர்கொளப் பொறாஅன் றானே கொண்டு, பொதுநீங்கு திகிரி திசை திசை போக்கி" சிதம்பரமும்மணி. 25. 2. (அ) "கொலையஞ்சா வினைவரால்" (ஆ) "நட்பாக்கும், வினைவர்போல்" கலி. 10: 6, 46; 8 (இ) "வேந்துபிழைத் தகன்ற விளைவராயினும்" பெருங். (1) 38 : 94. 3. "வல்லவர் செதுமொழி சீத்தசெவி" என்பது மூன்றாம்வேற்றுமைத் தொகைக்கு மேற்கோள்; தொல.் எச்ச. சூ. 17: நச். (பிரதிபேதம்) 1மொழிவிடன்மாலை; 2வினையர்
|