துணையாகக் காதலித்தலைக்கொள்கின்ற 1கலியாணநாளிலே ஓத்தினையுடைய அந்தணன் அங்கியங்கடவுளை வலஞ்செய்வான்போலே (1) மெல்லிதாகியசூட்டு மயிரினையுடைய அன்னம் தன்னுடைய அழகிய நடையினையுடைய பேட்டோடே கூடிப் பூக்கள் அலர்ந்த குளிர்ச்சியினையுடைய பொய்கையிடத்தே நின்ற தாமரையினது புதிதாக முறுக்கு நெகிழ்ந்த தாது சூழ்ந்த தனித்த மலரைப் புறத்தே சேர்ந்து பெருமை தகும்படி திரிதரும் பரந்த புனலையுடைய நல்ல ஊரினையுடையவனே; எ-று. வலஞ்செய்வான் போலென்ற ஏனையுவமம் பயவுவமமின்றி வினையுவம மாத்திரையை மேல்வருகின்ற கருப்பொருட்குக் கொடுத்து 2அதனைச் சிறப்பித்துநின்றது, 3அன்னத்திற்கு ஆங்கியங்கடவுள் அறிகரியாக மந்திர 4விதியாற் சூழுங் கருத்தின்றித் தாமரையைச் சூழவருகின்ற தொழின்மாத்திரையே கோடலின். அந்தணன் எரிவலஞ்செய்வான் 5போல அக்கருத்தில்லாத அன்னம் பெடையோடே தனிமலரைச் சூழத் திரியும் ஊரவென்றதனான் நீயும் அக்கருத்தின்றிக் குலமகளிரைத் தீவலஞ்செய்துவரைந்துகொண்டு பாதுகாவாது ஒழுகுகின்ற நினக்கு எம்மைப் பாதுகாத்தலுளதாமோவெனக் காமக் கிழத்தியும் உள்ளுறையுவமங் கூறினாளாகவுரைக்க. இதனை, "ஏனோர்க் கெல்லா மிடம்வரை வின்றே" (2) என்று உவமப்போலியிற் கூறிய விதியாற் கொள்க. 8 | (3)தெள்ளரிச் சிலம்பார்ப்பத் தெருவின்கட் 6டாக்கிநின் னுள்ளங்கொண் 7டொழித்தாளைக் குறைகூறிக் கொளநின்றாய் துணிந்தது பிறிதாகத் துணிவில ளிவளெனப் பணிந்தாய்போல் வந்தீண்டுப் (4)பயனில மொழிவாயோ |
எ - து: தெளிந்த உள்ளிடுமணியையுடைய சிலம்பு ஆரவாரிப்ப வந்து தெருவிடத்தே (5) தாக்கணங்கு போலத் தாக்கி நின்னெஞ்சை அகப்படுத்திக்
1. "ஓய்த லாய்த னிழத்தல் சாஅ, யாவயினான்கு முள்ளத னுணுக்கம்" தொல். உரி. சூ. 32. 2. தொல். உவம. சூ. 27. 3. "தெள்ளரிப் பொற்சிலம்பு" மது. 444. 4. குறள். 'பயனில சொல்லாமை' என்னும் 20-ஆம் அதிகாரம் இங்கே அறிதற்பாலது. 5. தாக்கணங்கென்பதற்கு, தாக்கி வருத்துவதோரணங்கு (குறள். 1082. பரி) தீண்ட வருத்தஞ்செய்யுந் தெய்வம்; சீதேவியுமாம் (சிலப். 14 : 160. அரும்பத) தீண்ட வருத்துந் தெய்வமகள் (சிலப். 14: 160. அடியார்க்கு) தீண்டி வருத்துந்தெய்வம் (மணி. 3 : 57. உரை) வருத்துந் (பிரதிபேதம்) 1கல்லியாண நாளிலே, 2அதனைப்பிறப்பித்து நின்றது, 3அன்னத்திற்றங்கிய, கடவுள், 4விதியிற்சூழும், 5போலக்கருத்தில்லாத, 6தாக்குநின், 7ஒளித்தாளை.
|