பக்கம் எண் :

மூன்றாவது மருதம்419

கொண்டுபின்னர்க்கைவிட்டவளை நின் (1) வருத்தத்தைச்சொல்லி அழைத்துக் கொள்ளக் கருதிநின்ற நீ அறுதியிட்டு வந்த காரியம் வேறொன்றாயிருக்க இவள் தனக்கென ஓர் (2) அறுதியுடையளல்லளென்று கருதி இவ்விடத்தே தாழ்ந்தாயைப்போல வந்து பயனில்லாத சொற்களைச் சொல்லக்கடவையோ? அது நின்னை வருத்தாதோ? எ - று.

12 (3) பட்டுழி யறியாது பாகனைத் தேரொடும்
விட்டவள் வரனோக்கி விருந்தேற்றுக் கொளநின்றாய்
(4) நெஞ்சத்த பிறவாக 1நிறையில ளிவளென
வஞ்சத்தான் 2வந்தீங்கு வலியலைத் தீவாயோ

எ - து: 3நீ சொல்லாதே அகப்பட்ட (5)பரத்தையரது நெஞ்சு வலிதென்று 4அறியாது பாகனைத்தேரொடும்போகவிட்டு அவள் உன்னைவிருந்தாக எதிர் கொள்ள அவள் வரவினைக் கருதிநின்ற நீ அவள் வரக்காணாமையினாலே நின்னெஞ்சத்திடத்தன வேறுசிலவாயிருக்க இவள் (6) நிறையென்கின்ற


தெய்வம் (அகம். 7 : 4. உரை) என்று பொருளெழுதப்பெற்றிருத்தலால் அவ்வுரைகாரர் பலரும் பெரும்பாலும் ஒரு கொள்கையர்; நச்சினார்க்கினியர்"வேய்நெடுந் தோளியொர், தாக்கணங் கோமக ளோவெனத் தாழ்ந்தான்" (சீவக. 1473) என்புழியும், இச்சொற்குத் திருவென்றே பொருள் கூறியுள்ளார். இவர் கொள்கைக்கு, "தாக்கணங்குறை யுந்தடந்தாமரை" (சீவக. 871) என்பதும் சிலப். அரும்பத. இரண்டாவதுரையும் நிகண்டுகளும் ஒத்தனவாம்.

1. குறை - ஆகவேண்டிய காரியமுமாம்.

2. அறுதி - வரையறை; நிச்சயம்.

3. "உள்ளது வர்த்தல்" என்னும் மெய்ப்பாட்டிற்கு, பட்டுழி ........................... கொள நின்றாய்" என்பது மேற்கோள்; தொல். மெய்ப். சூ. 24. பே.

4. தோழிக்குந் தலைவிக்கும் உரித்தாகிய வெளிப்படக் கூறுதலுள், ஆற்றாமை வாயிலாகத் தலைவன் வந்துழித் தலைவி வெளிப்படக் கூறியதற்கு, "நெஞ்சத்த பிறவாக..................ஈவாயோ" என்பது மேற்கோள்; தொல். பொருளி. சூ. 47. நச்.

5. "இரும்பியன் றன்ன கருங்கோட் டெருமை" (அகம். 56 : 3.) என்பதற்கு, 'இரும்பு போன்ற நெஞ்சினை யுடையராகிய பரத்தையர்' என்று எழுதி யிருக்கும் உள்ளுறை இங்கே அறிதற்பாலது.

6. நிறையென்பதற்கு 'மறை பிறரறியாமை' என்று நவ்வந்துவனாரும், 'ஐம்பொறிகளையும் அடக்குதல்' என்று பேராசிரியரும், 'காப்பன காத்துக் கடிவன கடிந்தொழுகு மொழுக்கம்' என்று மணக்குடவரும், 'காப்பன காத்துக் கடிவன கடிந்தொழுகு மொழுக்கம் என்றும் 'கற்பு' என்றும் பரிப்பெருமாளும், 'நெஞ்சைக்கற்புநெறியில் நிறுத்துதல்' என்றும் 'மனத்து அடக்கற்பாலனவற்றை அடக்குதல்' என்றும் 'மறை

(பிரதிபேதம்) 1நிறைவில ளிவளென, 2வந்தீண்டு வலிதொலைத் தீவாயோ, 3நீ சொல்லா தெய்தப்பட்ட, 4அறியாதபாகனை.