பக்கம் எண் :

420கலித்தொகை

குணமுடைய ளல்லளென்று கருதிப் பொய்வன்மையாலே இவ்விடத்தே வந்து உன் (1) ஊராண்மையாலே அலைக்கக்கடவையோ ? அது நின்னை வருத்தாதோ? எ - று.

நெஞ்சகத்தவென்ற பன்மை தன்வயத்த ளாக்கிக்கொள்ளக் கருதிய தொழில்களை.

16 (2) இணர்ததை தண்காவி னியன்றநின் குறிவந்தாள்
புணர்வினிற் புகன்றாங்கே புனலாடப் பண்ணியாய்
தருக்கிய பிறவாகத் தன்னில ளிவளெனச்
செருக்கினால் வந்தீங்குச் (3) சொல்லுகுத் தீவாயோ

எ - து; பூங்கொத்து நெருங்கின குளிர்ந்த பொழிலிலே நீ செய்த குறியிடத்தே வந்தவளைப் புணர்ச்சியிடத்தே கொண்டாடி அப்பொழுதே கூடப்புனலாடும்படி பண்ணின நீ நின்னெஞ்சின் மிக்குநடக்கின்றவை வேறொன்றாயிருக்க இவள் (4) தனக்கென 1ஒரு நெஞ்சுடையளல்லளென்று கருதி மனச் செருக்காலே இவ்விடத்தேவந்து பரத்தையர்க்குக்கூறும் பயன்படுசொற்களைப் பாழே 2போக்கக்கடவையோ? அது நின்னை வருத்தாதோ? எ - று.

"வாயிற் கிளவி வெளிப்படக் கிளத்த, றாவின் றுரிய தத்தங் கூற்றே" (5) என்பதனால், துணிவிலள் நிறையிலளென ஆற்றாமைவாயிலாகத் தலைவன் வந்துழி வெளிப்படக்கூறினாள்.

எனவாங்கு, அசை.

21 (6) தருக்கேம் பெருமநின் னல்கல் விருப்புற்றுத்
தாழ்ந்தாய்போல் வந்து தகவில செய்யாது

பிறரறியாமை' என்றும்பரிமேலழகரும், 'மனத்தைநிறுத்துதல்' என்றும் 'மறைபிறரறியாமை' என்றும் நச்சினார்க்கினியரும் பொருள் கூறுவர்.

1. "ஊராண்மைக் கொத்த படிறுடைத்து" (கலி. 89 : 2) என்பதும் அதன் உரையும் குறிப்பும் பார்க்க.

2. "இணர்ததையும் பூங்கானல்" சிலப். 7 : 31.

3. (அ) "கானலந் துறைவற்குச் சொல்லுகுப்போயே" ஐங். 136. (ஆ) "பருகுபா லன்னவென் சொல்லுகுத் தேனே"

4. "அவர்நெஞ் சவர்க்காதல் கண்டு மெவனெஞ்சே, நீயெமக் காகாதது" குறள். 1291. என்பதும் கலி. 67: தாழிசைகளின் ஈற்றடிகளும் இந்நூற்பக்கம். 408 : 3-ஆம் குறிப்பும் நோக்குக.

5. தொல். பொருளி. சூ. 47.

6. "தருக்கேம் பெரும.......................விருப்பற்றக்கால்" என்பது ஊடலுக்கு மேற்கோள். தொல். அகத்திணையியல்.சூ. 14. நச்.

(பிரதிபேதம்) 1ஓர்நெஞ்சு, 2போகக்கடவையோ வாயிற்கிளவி.