பக்கம் எண் :

மூன்றாவது மருதம்421

சூழ்ந்தவை செய்துமற் றெம்மையு முள்ளுவாய்
வீழ்ந்தார் விருப்பற்றக் கால்

எ - து; பெருமா! நின்னருளால் யாங்கள் 1மனஞ்செருக்கேம்; எம்மிடத்தே விருப்பமுற்றுக் (1) குறைந்தாய்போலேவந்துநின்று நினக்குத் தகுதிப்பாடில்லாதவற்றைச் செய்யாதே நீ விரும்பினாரிடத்து நுகரக்கருதியவற்றைச் செய்து முடித்து ஆண்டுள்ள விருப்பமற்ற இடத்துப் பின்பு எம்மையும் நினைப்பாயென ஊடல் தீர்கின்றாள் கூறினாள்; எ - று.

இதனால், இருவர்க்கும் புணர்ச்சியுவகை பிறந்தது.

இது வெள்ளைச்சுரிதகத்தாலிற்ற ஒத்தாழிசைக்கலி. (4)

(70) மணிநிற மலர்ப்பொய்கை மகிழ்ந்தாடு மன்னந்தன்
னணிமிகு சேவலை யகலடை மறைத்தெனக்
கதுமெனக் காணாது கலங்கியம் மடப்பெடை
மதிநிழ னீருட்கண் டதுவென வுவந்தோடித்
துன்னத்தன் னெதிர்வரூஉந் துணைகண்டு மிகநாணிப்
பன்மல ரிடைப்புகூஉம் பழனஞ்சே ரூரகேள்;
7நலநீப்பத் துறந்தெம்மை நல்காய்நீ விடுதலிற்
பலநாளும் படாதகண் பாயல்கொண் டியைபவாற்
றுணைமலர்க் கோதையார் வைகலும் பாராட்ட
மணமனைத் ததும்புநின் மணமுழவந் தெடுப்புமே;
11அகலநீ துறத்தலி னழுதோவா வுண்கணெம்
புதல்வனை மெய்தீண்டப் பொருந்துத லியைபவா
னினக்கொத்த நல்லாரை நெடுநகர்த் தந்துநின்
றமர்பாடுந் துணங்கையு ளரவம்வந் தெடுப்புமே;
15வாராய்நீ துறத்தலின் வருந்திய வெமக்காங்கே
நீரிதழ் புலராக்கண் ணிமைகூம்ப வியைபவா
னேரிழை நல்லாரை நெடுநகர்த் தந்துநின்
றேர்பூண்ட நெடுநன்மான் றெண்மணிவந் தெடுப்புமே;
எனவாங்கு;

1. தாழ்தலென்பது குறைதலென்னும் பொருளில் வருமென்பதை, "தாழ்ந்தான்" "தாழ்ந்து" (சீவக. 1473, 2657) என்பவற்றிற்கு இவர் எழுதியிருக்கும் உரையாலும் அறிக.

(பிரதிபேதம்) 1மனச்செருக்கேம்.