பக்கம் எண் :

422கலித்தொகை

20 மெல்லியான் செவிமுதன் மேல்வந்தான் காலைபோ
லெல்லாந் துயிலோ வெடுப்புக நின்பெண்டி
ரில்லி னெழீஇய யாழ்தழீஇக் கல்லாவாய்ப்
பாணன் புகுதராக் கால்.

இது பரத்தையிற் பிரிந்துவந்த தலைவன் தோழியை வாயில்வேண்ட அவள் வாயினேர்வாள் நெருங்கிக்கூறியது.

இதன் பொருள்.

(1) மணிநிற மலர்ப்பொய்கை மகிழ்ந்தாடு (2)மன்னந்தன்
னணிமிகு சேவலை யக(3)லடை மறைத்தெனக்
கதுமெனக் காணாது கலங்கியம் மடப்பெடை
மதி(4)நிழ னீருட்கண் டதுவென வுவந்தோடித்
துன்னத்தன் னெதிர்வரூஉந் துணைகண்டு மிகநாணிப்
(5)பன்மல ரிடைப்புகூஉம் பழனஞ்சே (6)ரூரகேள்.

எ - து: பலமணிகள் போலும் நிறங்களையுடையவாகிய மலர்களையுடைய பொய்கையிலே சேவலோடு மகிழ்ந்து விளையாடும் அன்னப்பெடை தனது அழகுமிக்க கேவலன்னத்தை அகன்ற தாமரையிலை மறைத்ததாக அதனைக் காணாமற் (7) கதுமெனக்கலங்கி அந்த அறியாமையை யுடையபெடை மதியினுடைய நிழலை நீருக்குள்ளே கண்டு அச்சேவலென்று உவந்து ஓடிச்சென்று தன்னைச் சேருதற்கு எதிரேவருகின்ற


1. "மணிநிற மலர்ப்பொய்கை வளர்ந்தருளு மயிலோனை" தொல். செய். சூ. 92. நச். மேற். "மணிநிற நெய்தல்" ஐங். 96; ஐந்-எழு. 60.

2. "அன்னச் சேவ லயர்ந்துவிளை யாடிய, தன்னுறு பெடையைத் தாமரை யடக்கப், பூம்பொதி சிதையக் கிழித்துப் பெடைகொண், டோங்கிருந் தெங்கி னுயர்மட லேற" மணி. 5: 123 - 126.

3. இந்நூற்பக்கம் 26 : 1-ஆம் குறிப்புப்பார்க்க.

4. "வண்சிறைப் பவளச் செவ்வாய்ப் பெடையன்ன மடமை கூரத் தண்கய, நீருட் கண்ட தன்னிழல் பிறிதென் றெண்ணிக், கண்டனங் கள்வ மற்றுன் காதலி தன்னை நீர்க்கீழ்ப், பண்டைய மல்லம் வேண்டா படுக்கவென் றூடிற் றன்றே" சீவக. 1623.

5. "பன்மலர்ப் பழனத்த" கலி. 78 : 1.

6. ‘ஊரகேள்’ கலி. 77: 7 ; 79: 6. அண்மைசுட்டிய விளிநிலைக்கிளவியின் முன் வல்லெழுத்து இயல்பாய் வந்ததற்கு இப்பகுதி மேற்கோள்; தொல். உயிர்மயங். சூ. 8. நச்.

7. கதுமென - விரைய. (அ) "கதுமெனச் சிறுகுடி துயிலெழூஉம்" (ஆ) "கதுமென வெரீஇ"
(இ) "கதுமெனக் கண்டவர்க், குண்ணின்ற நோய்