சேவலைக் கண்டு மிகவும் நாணிப் பல் பூக்களின் 1செறிவுக்குட் புக்கு ஒளித்திருக்கும் (1) பழனநிலஞ்சூழ்ந்த ஊரனே! யான் கூறுகின்றதனைக்கேள்; எ - று. பரத்தையர்சேரியிலே இருந்து நின்னோடே புணர்ந்து விளையாடுகின்ற பரத்தை வேறொரு பரத்தை களவொழுக்கத்தாலே மறைத்துக் கொண்டு போனாளாக நின்னைக் காணாது கதுமெனக் கலங்கி அந்தப் பரத்தையை வேறோர் தலைவன் வதுவையயர்கின்றதனை நீ வதுவையயர்கின்றாயென்று கருதி உவந்து சென்று தன்னைக் கூடுதற்கு எதிரேவருகின்ற நின்னைக் கண்டு இவன் தானே வருகின்றதனை அறியாது நாந் 2தேடிவந்தோமேயென்று அதற்குநாணித் தன் சுற்றத்திடத்தேயிருந்து நின்னை வருத்துகின்றாளென்று உள்ளுறை யுவமங்கூறித் தலைவனைத் தோழிநெருங்கினாள். 7 | நலநீப்பத் (2) துறந்தெம்மை நல்காய்நீ விடுதலிற் பலநாளும் படாதகண் பாயல்கொண் டியைபவாற் றுணை மலர்க் கோதையார் வைகலும் பாராட்ட மணமனைத் (3) ததும்புநின் மணமுழவந் தெடுப்புமே |
எ - து: நீ எம்மை நலம்போம்படியாக நீங்கிப் பின்னர் 3ஒருகாலத்தும் அருளாயாய்க் கைவிடுகையினாலே பலநாளுந் துயிலாத கண்கள் வருத்தமிகுதியால் யாங்கள் இருத்தலாற்றாது ஒருநாட் (4) படுக்கையையும் இடமாகக்
மிக வுயிரெஞ்சு துயர்செய்தல்" (ஈ) "கதுமென நோக்கி" (உ) "கது மெனத்தாம்வந்தார்" (ஊ) "கதுமெனவந்து" (எ) "கதுமெனநோக்கன் மின்வந்து" என்று இந்நூலுள் வருவனவும், (ஏ) ‘கதுமென’ விரை வுணர்த்துமென்று (தொல். இடை. சூ. 48. நச்.) எழுதப்பெற்றிருத்தலும் நோக்குக. (ஐ) "கதுமென் விரைவில்" என்றார் சேக்கிழாரும். 1. (அ) பழனம் பொதுநிலமென்பர் ஐங்குறு நூற்றுரைகாரர்; ஐங். 4. (ஆ) நீர்நிலைச்செறுவென்பர் அடியார்க்குநல்லார். சிலப். 10: 113. 2. "நல்காது துறந்த காதலர்" அகம். 113 : 9. 3. ததும்புதல் - ஒலித்தல்; (அ) "அருவி, முதுவாய்க் கோடியர் முழவிற் றதும்பி" குறுந். 78 (ஆ) "வெண்ணெ லரிநர் பின்றைத் ததும்புந், தண்ணுமை" அகம். 40 : 13 - 4. (இ) "அருவி, தாழ்ந்து வீழ்ந்தவை முழவிற் றதும்பின" சீவக. 1560. (ஈ) "இமிழ்முழாத் ததும்பு, மரங்கம்" (உ) "முழவொடு பல்லிய முன்றிற் றதும்ப" பெருங். (1) 34: 140 - 141; (5) 9 : 4. என்பவை இங்கே ஒப்பு நோக்கற்பாலன. 4. பாயல், உறக்கமென்னும் பொருளிலும் வரும்; இதனை இந்நூற்பக்கம் 156 : 3 - ஆம் குறிப்பால் உணர்க. (பிரதிபேதம்) 1செறிவுக்குள்ளே புக்கு, 2தேடிவந்தேமோ, 3ஒருகாலும்.
|