பக்கம் எண் :

மூன்றாவது மருதம்425

னினக்கொத்த நல்லாரை நெடுநகர்த் தந்துநின்
றமர்பாடுந் (1)துணங்கையு ளரவம்வந் தெடுப்புமே

எ - து; நீ எம்மை நீங்கத் தாம் துயிலைத் துறக்கையினாலே அழுது மாறாத மையுண்கண் 1எம்மெய் புதல்வனைத் தீண்டுகையினாலே பொருந்துதலுங் கூடும்; அதனை நின் இளமைப்பருவச் செவ்விக்கொத்த பரத்தையரை அவர்க்கென்று சமைத்த நெடிய மனையிலே கொண்டு வந்து (2) நின்சுற்றமாகிய பரத்தையர் நின்று பாடுந் துணங்கைக்கூத்தில் எழுந்த ஆரவாரம் வந்து போக்கும்; அதுவே குறை. எ - று.

15 வாராய்நீ துறத்தலின் வருந்திய வெமக்காங்கே
2நீரிதழ் புலராக்கண் ணிமைகூம்ப லியைபவா

வெளிப்படையாகக் கூறியதற்கு, மேற்கோள் காட்டுவர் நச்சினியார்க்கினியர்; தொல். பொருளி. சூ. 47.

1. "துணங்கை, இங்கே மகளி ராடுந் துணங்கைக் கூத்து; சிங்கிக் கூத்தென்றும் சொல்லப்படும்; இது மகிழ்ச்சிக்காலத்தில் தமருடன் ஆடப்படுவது; இதற்கு முழவு முதலிய வாச்சியத்தானும் பாட்டானும் ஒலியுண்மையின் ‘துணங்கையுளரவம்’ என்றார். (அ) "துணங்கையந் தழூஉவின் மணங்கமழ் சேரி." மது. 329. என்பதும் (ஆ) "இலங்குவளை மடமங்கையர், துணங்கை யஞ்சீர்" மது. 156-160. (இ) "மகளிர் தழீஇய துணங்கை யானும்" குறுந். 31. (ஈ) "கலிகெழு துணங்கை யாடிய மருங்கின்" (உ) "முழாஅவிமிழ் துணங்கைக்குத் தழூஉப்புணை யாகச், சிலைப்புவல்லேற்றிற் றலைக்கை தந்துநீ, நளிந்தனை வருத லுடன்றன ளாகி" பதிற். 13 : 5; 52: 14 - 16. (ஊ) "தளரிய லவரொடு, துணங்கையாய்" (எ) "நிரைதொடி நல்லவர் துணங்கையுட் டலைக்கொள்ளக், கரையிடைக் கிழிந்தநின் காழகம்வந் துரையாக்கால்" கலி. 66: 17 - 18; 73: 16 - 17. (ஏ) "முழவிமிழ் துணங்கைதூங்கும் விழவின்" அகம். 336 : 16. என்பவையும் ஈண்டு அறிதற்பாலன; இதற்கு இலக்கணம் (ஐ) "பழுப்புடை யிருகை முடக்கி யடிக்கத், துடக்கிய நடையது துணங்கையாகும்" என்பது; வீரர் வென்றாடு துணங்கையும் பேய்கள் ஆடும் துணங்கையும் இதனின் வேறு.

2. ‘நின் றமர்பாடும்’ என்ற தொடரை ‘நின்று அமர்பு ஆடும்’ எனச் சொற்பிரிவுசெய்து, நின்று விரும்பி யாடுகின்ற வெனப் பொருள் கொண்டனர், இளம்பூரணர்; தொல்.

(பிரதிபேதம்) 1எம்மெய்ப் புதல்வனை, 2ஈரிதழ்.