(1) னேரிழை நல்லாரை நெடுநகர்த் தந்துநின் றேர்பூண்ட நெடுநன்மான் றெண்மணிவந் தெடுப்புமே எ - து: நீ ஈண்டு வாராயாய் யாந் துயிலைத் துறக்கையினாலே வருந்திய எமக்கு நீர் வீழ்கின்ற இதழ்போல் நீர் மாறாத கண்கள் பாயலிலே இமை பொருந்துதலுங் கூடும்; அதனை ஒத்த இழையினையுடைய பரத்தையரைத் தமக்குச் 1சமைத்த நெடிய இல்லிலே கொண்டுவருகையினாலே பிறந்த நின் தேரிலே பூண்ட உயர்ந்த நல்ல குதிரையிற் கட்டின தெளிந்த மணியோசை வந்து போக்கும்; அதுவே குறை எ - று. எனவாங்கு, 2அசை. 20 | (2) மெல்லியான் செவிமுதன் மேல்வந்தான் காலைபோ லெல்லாந் துயிலோ வெடுப்புக நின்பெண்டி ரில்லி னெழீஇய யாழ்தழீஇக் கல்லாவாய்ப் பாணன் புகுதராக் கால் |
எ - து: நாற்படையாற் குறைந்த (3) அகத்துழிஞையான் செவியிடத்தே மேலே வந்துவிட்ட புறத்துழிஞையானுடைய பள்ளியெழுச்சி முரசுபோல முற்கூறியவெல்லாம் அரிதிற்பெற்றதுயிலையோ போக்குக, பரத்தையரில்லிலே வாசித்த யாழைத் தழுவிக்கொண்டு வாயிலாய்த் திரிகின்ற தொழியப்பாட்டைத் திருந்தக்கல்லாத வாயினையுடைய பாணன் நம் இல்லின்கண் வளராதவிடத்து; அவன்வரவேகாண் எமக்கு வருத்தமென நெருங்கிக்கூறினாள். எ - று. இதனால், இருவர்க்கும் புணர்ச்சியுவகை பிறந்தது. "வாயிற்கிளவி வெளிப்படக் கிளத்த, றாவின் றுரிய தத்தங் வற்றே" (4)என்பதனால், தோழி தாழிசைகளில் வெளிப்படக் கூறினாள். இது வெள்ளைச்சுரிதகத்தாலிற்ற ஒத்தாழிசைக்கலி. (5)
1. "நேரிழை மகளிர்" பட். 22. 2. கலிப்பாவி னிறுதி வெண்பாவியலினாற் பண்புற வந்ததற்கு, "மெல்லியான் செவிமுதல்.............புகுதராக்கால்" என்பது மேற்கோள்; தொல். செய். சூ. 77. பேர். நச். 3. அகத்துழிஞை புறத்துழிஞை யென்னும் வழக்கினை, தொல். புறத். சூ. 9 - 13. நச். உரைகளானுணர்க. அகத்துழிஞையை நொச்சி யென்பர் பிறநூலார். 4. தொல். பொருளி. சூ. 47. (பிரதிபேதம்) 1சமைத்தவில்லிலே, 2ஆங்கசை மெல்லியான்.
|