பக்கம் எண் :

432கலித்தொகை

பேணானென் றுடன்றவ ருகிர்செய்த வடுவினான்
மேனாணின் றோள்சேர்ந்தார் நகைசேர்ந்த விதழினை;
13நாடிநின் றூதாடித் துறைச்செல்லா ளூரவ
ராடைகொண் டொலிக்குநின் புலைத்திகாட் டென்றாளோ
கூடியார் புனலாடப் புணையாய மார்பினி
லூடியா ரெறிதர வொளிவிட்ட வரக்கினை;
17வெறிதுநின் புகழ்களை வேண்டாரினெடுத்தேத்து
மறிவுடை யந்தண னவளைக்காட் டென்றானோ
களிபட்டார் கமழ்கோதை கயம்பட்ட வுருவின்மேற்
குறிபெற்றார் குரற்கூந்தற் கோடுளர்ந்த துகளினை;
எனவாங்கு;
22செறிவுற்றேமெம்மைநீ செறியவறிவுற்
றழிந்துகு நெஞ்சத்தே மல்லலுழப்பக்
கழிந்தவை யுள்ளாது கண்ட விடத்தே
யழிந்துநிற் பேணிக் கொளலி னிழிந்ததோ
விந்நோ யுழத்த லெமக்கு.

இதுவும் அது.

இதன் பொருள்.

(1) இணைபட நிவந்த நீலமென் சேக்கையுட்
டுணைபுண ரன்னத்தின் றூவிமெல் லணையசைஇச்


1. (அ) "மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்படத், துணைபுண ரன்னத் தூநிறத் தூவி,யிணையணை மேம்படப் பாயணையிட்டு" (நெடுநல். 131 - 133) என்பதும் (ஆ) ‘என்புருகி மிக்க அன்போடு புணர்தலிற் சூட்டிற்கு மென்மை பிறக்குமென்பது தோன்றத் துணைபுணரன்னத் தூநிறத் தூவி யென்றார்’ என்னும் அதன் விசேடவுரைப் பகுதியும், (இ) "துணைபுண ரன்னத் தூவியிற் செறித்த, விணையணை" (சிலப். 4 : 66 - 7.) என்பதும் (ஈ) ‘தன் சேவலோடு புணர்ந்த அன்னப்பேடை அப்புணர்ச்சியான் உருகியுதிர்த்த வயிற்றின் மயிர் எஃகிப் பெய்தபலவகை அணை’ என்னும் அதன் விசேடவுரைப் பகுதியும், (உ) "ஆதரம் பெருகு கின்ற அன்பினா லன்ன மொத்தும்" (சீவக. 189) என்புழி, "ஆதரம் பெருகுமன்பாவது: புணர்வதன் முன்னும் பின்னும் ஒருதன்மைத்தாய்ச் செயற்கையால் மிகுமன்பு. அன்னம், புணர்ச்சியால் மெய்யுருகு மென்மைக்கு உவமம். பலரும், ‘துணைபுண ரன்னத்தின் றூவி' என்று புணர்ச்சியால் தூவிக்கு மென்மை பிறக்கு