பக்கம் எண் :

மூன்றாவது மருதம்433

சேடியல் வள்ளத்துப் பெய்தபால் சிலகாட்டி
யூடுமென் (1) சிறுகிளி யுணர்ப்பவண் முகம்போலப்
1புதுநீர புதலொற்றப் புணர்திரைப் பிதிர்மல்க
மதிநோக்கி 2யலர்வீத்த வாம்பல்வான் மலர்நண்ணிக்
கடிகயத் தாமரைக் கமழ்முகை கரைமாவின்
வடிதீண்ட வாய்விடூஉம் வயலணி நல்லூர

எ - து: (2) ஐந்துவகைப்படப் படுத்தலால் உயர்ந்த நீலப்பட்டாற்செய்த மெல்லிய படுக்கையிடத்துக்கிடந்த துணையோடேகூடிய அன்னத்தின் (3) தூவியாற் செய்த மெல்லிய அணையைச் சார்ந்திருந்து பெருமையியன்ற வெள்ளி வட்டியிலே வார்த்த பாலைச் சிறிது 3காட்டி அப்பாலையுண்ணாது வெறுத்திருந்த கிளி அதனை உண்டற்கு வேண்டும் மொழிகளைக் கூறி உண்ணப்பண்ணுவித்து அவ்வுணவினான் மகிழ்ந்து முத்தங்கொள்பவள் 4முகம்போல மிகுதியுடைய கயத்திடத்துநின்ற புதிய நீரிடத்தனவாகிய பசிய தூறுகளின்மேலே இடைவிடாது வருகின்ற திரைகள் மோதுகையினாலே அதன் துவலை மிகாநிற்க இடைநின்ற தாமரையினது கமழாநின்ற முகை தனக்குரிய வண்டு நுகர அலராமல் நின்று கரையில் நின்ற மாவினது வடு மதியைநோக்கி அலர்ந்த ஆம்பலினது வெள்ளிதாகிய மலரை முதற் றீண்டிப் பின்னர்த் தன்னைத் தீண்ட அலரும் வயலணிந்த நல்ல ஊரனே! எ - று.


மென்றார்" என்று இதனை மேற்கோள்காட்டி எழுதியிருத்தலும் இங்கே அறிதற்பாலன.

1. (அ) "கோங்கலர் சேர்ந்த மாங்கனி தன்னைப், பாங்குற விருந்த பல்பொறி மஞ்ஞையைச், செம்பொற் றட்டிற் றீம்பா லேந்திப், பைங்கிளி யூட்டுமோர் பாவையா மென்றும்" மணி. 19 : 67- 70. (ஆ) "வண்டளிர் மாஅத்துக்,
கிளிபோல் காய கிளைத்துணர்" அகம். 37 : 7 - 8.

2. (அ) "ஐந்துமூன் றடுத்த செல்வத் தமளி" சீவக. 838. (ஆ) "பதினைந் தமைத்த படையமை சேக்கையுள்" பெருங். (4) 5: 51. (இ) "தூயமென் பஞ்சி யன்னத் தூவியூ றினிய செய்யு, மாய்மயிர் முதல மூவைந் தடுக்கிய வமளி"
நைடதம். மணம். 26.

3. தூவியென்றது சிறகினை; இச்சொல் அன்னத்தின்சிறகிற்குப் பெரும்பான்மையாயும் கிளி வெள்ளாங்குருகு நாரை காக்கை மயில் முதலியவற்றின் சிறகிற்குச் சிறுபான்மையாயும் வரும்.

பிரதிபேதம்) 1புதுநீரப்புதல், 2அலர்வித்தவாம்பல், ஆவித்த வாம்பல்,3 காட்டிப் பாலை, 4 முகம்போல வென்ற வேணையுவமம்.