பக்கம் எண் :

436கலித்தொகை

(1) கூடியார் புனலாடப் புணையாய மார்பினி
லூடியா ரெறிதர வொளிவிட்ட வரக்கினை

எ - து: கூடினமகளிர் புனலாடுதற்குத் தெப்பமாகிய மார்பிலே அப்புனலாட்டுப்பெறாது ஊடியமகளிர் சாதிலிங்கம் இருந்த (2) செப்போடே அதனை எறிதலைச் செய்கையினாலே விளக்கம் மிக்க சாதிலிங்கத்தை நினக்குக் கூடலாம் பரத்தையரைத் தேடித் தூதாய்த் திரிந்து துறையிற் செல்லாள் ஊரிலுள்ளாருடைய ஆடைகளை இடுவித்துக்கொண்டு ஒலியாமற் றிரியும் நின்னுடைய புலைத்தி எனக்குக் காட்டென்று சொன்னாளோ? எ - று.

ஒலிக்கும், 1இகழ்ச்சிக்குறிப்பு. ஒளிக்குமென்றும் பாடம். (3) புலைத்தி, 2செறற்சொல்.

17 வெறிதுநின் 3புகழ்களை வேண்டாரி லெடுத்தேத்து
(4) மறிவுடை யந்தண னவளைக்காட் டென்றானோ

1. "தாழ்நீ ரிமிழ்சுனை நாப்பட் குளித்தவண், மீநீர் நிவந்த விறலிழை கேள்வனை, வேய்நீ ரழுந்துதன் கையின் விடுகெனப், பூநீர்பெய் வட்ட மெறியப் புணைபெறா, தருநிலை நீரி னவடுயர் கண்டு, கொழுநன் மகிழ் தூங்கிக் கொய்பூம் புனல் வீழ்ந்து, தழுவுந் தகைவகைத்துத் தண்பரங் குன்று" பரி. 21 : 39 - 45.

2. (அ) "வண்ணநீர் கரந்த வட்டுவிட் டெறிவோரும்" (ஆ) "புல்லா தூடிப் புலந்து நின்றவள், பூவெழில் வண்ணநீர் பூரித்த வட்டெறிய" பரி. 11 : 55; 12 : 67 - 8. (இ) "குலிகநீர் நிறைந்த பந்திற் கொம்பனாரோச்ச மைந்தர்மெலிவுகண் டுவந்து மாதோ விருப்பொடு மறலினாரே" சீவக. 968. (ஈ) "காதன் மங்கைய ராகத் தெறியுஞ்சாதிங் குலிகமுஞ் சந்தனத் தேய்வையும்" (உ) "அஞ்செஞ் சாந்த மாகத் தெறிந்தும்" பெருங். (1) 41 : 129 - 30; 42 : 187.

3. (அ) "அறனில்புலைத்தி யெல்லித் தோய்த்த, புகாப்புகா(க்) கொண்ட புன்பூங் கலிங்கமொடு" நற். 90 : 3 - 4. (ஆ) "நலத்தகைப் புலைத்தி பசைதோய்த் தெடுத்துத், தலைப்புடைப் போக்கித் தண்கயத் திட்ட, நீரிற் பிரியாப் பரூஉத்திரி" குறுந். 330. (இ) "பசைகொன் மெல்விரற் பெருந்தோட் புலைத்தி" (ஈ) "பசைவிரற் புலைத்தி நெடிது பிசைந் தூட்டிய, பூந்துகில்" அகம். 34 : 11. 387, 6 - 7. என்பவையும் (உ) "களர்ப்படு கூவற் றோண்டி நாளும்புலைத்தி கழீஇய தூவெள்ளறுவை" புறம். 311 : 1 - 2. என்பதும் ஈண்டு அறிதற்பாலன.

4. (அ) "தவ்வையைக் காட்டி" என்புழி, தவ்வைக்குக்காட்டி யென்று பொருள்கூறி, "தவ்வையைக் காட்டியென்பது ‘அறிவுடை யந்தண

(பிரதிபேதம்) 1இகட்சிக்குறிப்பு, 2செற்றச்சொல், 3புகழிணை வேண்டாரின்.