பக்கம் எண் :

மூன்றாவது மருதம்437

(1) 1களிபட்டார் கமழ்கோதை கயம்பட்ட வுருவின்மேற்
குறிபெற்றார் குரற்கூந்தற் கோடுளர்ந்த துகளினை

எ - து: கூட்டத்தாற் களித்தல் பிறந்தவருடைய கமழ்கின்ற மாலை முயக்கத்தான் மென்மைபடுதற்குக் காரணமான வடிவின்மேலே அதற்குப் பின்பு நின்னாற் குறியிடம்பெற்றாருடைய பற்றத்தினையுடைத்தாகிய மயிரினுடைய முடியை 2நீ வகிர்ந்து கைசெய்து முடிக்கையினாலே வீழ்ந்துகிடந்த பூந்துகளை நின்புகழ்களைக்கேட்கவேண்டாத எங்கள் இல்லிலே (2) ஒருபயனின்றி மிகுத்துக் கொண்டாடும் அறிவில்லாத அந்தணன் அவளைக்காணப்பண்ணென்று சொன்னானோ? எ - று

(3) கயம் - மென்மை; ஈண்டுத் துவட்சியை உணர்த்திற்று. அறிவுடை யந்தணன், இகழ்ச்சி. அவட்கு என உருபு

3மயக்கமாம்.

4எனவாங்கு, அசை.

22 5செறிவுற்றே மெம்மைநீ செறிய வறிவுற்
றழிந்துகு நெஞ்சத்தே மல்ல லுழப்பக்
கழிந்தவை யுள்ளாது கண்ட விடத்தே.

னவளைக் காட்டென்றானோ' என்பதுபோல உருபுமயக்கம்" என்று இலக்கணமுங் கூறி, (ஆ) "களித்தானைக் காரணங்காட்டுதல்" என்புழி, "களித்தானையென்னும் இரண்டாவது, ‘அறிவுடை..................என்றானோ’ என்புழிப்போல நின்றது" என்றும் எழுதினர். பரி, குறள். 167; 929. (இ) உருபுமயக்கத்திற்கு இவ்வடியை மேற்கோள் காட்டி, ஐயைக்குவ்வாகக்கொள்கவென்றனர் மயிலை; நன். பெயரி. சூ. 60. (ஈ) சம்பிரதானம் வடநூலார்கூறாத இரண்டனோடும் வந்ததென்று இவ்வடியை யெடுத்துக் காட்டுவர் சுப்பிரமணிய தீக்ஷிதர்; பிரயோக. 15. (உ) "யாரே யாயினு மிவன்மக ளொருத்தியைச், சீர்கெழு வீணை சிறப்பொடு காட்டி"
என்பது, பெருங். (1) 34 : 80 - 81.

1. "வெறிது" பெருங். (3) 2 : 28. கம்ப. மாயாசீதை. 7.

2. "களிபட்டார் கமழ்கோதை கயம்பட்ட வுருவின்மேல்" என்பது; கூழைமோனைக்கு மேற்கோள்; தொல். செய். சூ. 92. நச்.

3. கயவென்பது உரிச்சொல்லாதலின், அது விகாரவகையாற் கயமென நின்றது, "வயவென்னுமுரிச்சொல் விகாரவகையால் வயமென நின்றது; சிறுபான்மை மெல்லெழுத்துப் பெற்றதெனினும் அமையும் (கோவையார். 30. கொளு. உரை) என்று போராசிரியர் எழுதியிருத்தல் இங்கு அறிதற்பாலது.

(பிரதிபேதம்) 1கழிபட்டார், 2வகிர்ந்து வகைசெய்து, 3மயக்கமுமாம், 4எனவாங்கு ஆங்கசை. 5செறிவுற்றேயெம்மை.