யழிந்துநிற் பேணிக் கொளலி னிழிந்ததோ விந்நோ யுழத்த லெமக்கு எ - து: முன்பு எம்மை நீ செறிகையினாலே யாமும் நின்னோடு செறிதலை யுற்றேம்; இக்காலத்து நீ செய்யுங் குறைகளை அறியலுற்று அதனானே அழிந்துகெடுகின்ற நெஞ்சத்தினையுடையேம்; அதன்மேலே வருத்தத்திலே தங்கும்படியாக நீ செய்து கழிந்த இக்குறைகளைக் குறையென்று நினையாதே நின்னைக் கண்டஇடத்தே நெஞ்சு அழிந்து நின்னைப்பேணிக்கொள்ளுதலின், இக்காமநோயிலே தங்குதல் எமக்குத் தாழ்ந்ததொரு 1தொழிலோ? இஃது இழிந்ததன்றுகாண். எ - று. இதனால், இருவர்க்கும் புணர்ச்சியுவகை பிறந்தது. இது வெள்ளைச்சுரிதகத்தாலிற்ற ஒத்தாழிசைக்கலி. (7) (73) | அகன்றுறை யணிபெறப் புதலொடு தாழ்ந்த பகன்றைப்பூ வுறநீண்ட பாசடைத் தாமரை கண்பொர வொளிவிட்ட வெள்ளிய வள்ளத்தாற் றண்கமழ் நறுந்தேற லுண்பவண் முகம்போல வண்பிணி தளைவிடூஉம் வயலணி நல்லூர; | 6 | நோதக்கா யெனநின்னை நொந்தீவா ரில்வழித் தீதிலேன் யானெனத் தேற்றிய வருதிமன் ஞெகிழ்தொடி யிளையவ ரிடைமுலைத் தாதுசோர்ந் திதழ்வனப் பிழந்தநின் கண்ணிவந் துரையாக்கால்; | 10 | கனற்றிநீ செய்வது கடிந்தீவா ரில்வழி மனத்திற்றீ திலனென மயக்கிய வருதிம னலமர லுண்கண்ணா ராய்கோதை குழைத்தநின் மலர்மார்பின் மறுப்பட்ட சாந்தம்வந் துரையாக்கால்; | 14 | என்னைநீ செய்யினு முரைத்தீவா ரில்வழி முன்னடிப் பணிந்தெம்மை யுணர்த்திய வருதிமன் னிரைதொடி நல்லவர் துணங்கையுட் டலைக்கொள்ளக் கரையிடைக் கிழிந்தநின் காழகம்வந் துரையாக்கால்; எனவாங்கு; |
18 | மண்டுநீ ராரா மலிகடல் போலுநின் றண்டாப் பரத்தை தலைக்கொள்ள நாளும் |
(பிரதிபேதம்) 1தொழிலோவிது இழிந்ததன்று காணென வூடறீர்ந்தாள் இதனால்.
|