புலத்தகைப் பெண்டிரைத் தேற்றிமற் றியாமெனிற் றோலாமோ நின்பொய் மருண்டு. இது "தங்கிய வொழுக்கத்துக் கிழவனை வணங்கி, யெங்கையர்க் குரையென விரத்தற்கண்" (1) தலைவி கூறியது. இதன் பொருள். அகன்றுறை யணிபெறப் புதலொடு தாழ்ந்த (2) பகன்றைப்பூ வுறநீண்ட பாசடைத் தாமரை கண்பொர வொளிவிட்ட வெள்ளிய வள்ளத்தாற் (3) றண்கமழ் நறுந்தேற லுண்பவண் முகம்போல வண்பிணி தளைவிடூஉம் வயலணி நல்லூர எ - து: அகன்ற நீருண்ணுந்துறை அழகுபெறும்படி சிறுதூறோடே வந்து தாழ்ந்து கிடந்த பகன்றையினது பூவைச்சேரும்படி வளர்ந்த பசிய இலையினையுடைய தாமரைமுகை கண்வெறிகொள்ளும்படி ஒளிவிட்ட (4) 1வெள்ளி வள்ளத்தாலே குளிர்ந்த நறிய கள்ளை உண்பவள் முகம்போல வளவிய முறுக்குநெகிழும் வயலணிந்த நல்ல ஊரனே! எ - று.
1. தொல். கற்பி. சூ. 6. இச்சூத்திரவுரையில் "அகன்றுறை யென்னு மருதக்கலியுள் ‘நோதக்காய்....................உரையாக்கால்’ எனவும் ‘மண்டுநீ ராரா..............மருண்டு’ எனவும் கூறுதலால், தலைவி தான் தாழ்ந்தவாறும் பின்னர் எங்கையர்க்கு உரையெனக் கூறியவாறும் காண்க" என்றனர் இளம்பூரணர்; நச்சினார்க்கினியரும் இதனையே தழுவினர். 2. (அ) "பகன்றைப்பூ வுறநீண்ட பாசடைத்தாமரை" என்பது, பகன்றை கிலுகிலுப்பையன்று; சிவதையென்பதற்கு மேற்; குறிஞ்சி. 88. உரை (ஆ) "பாண்டிலொப்பிற்பகன்றைமலருங், கடும்பனியற்சிரம்" நற். 86. (இ) "வெள்ளிதழ்ப், பகன்மதி யுருவிற் பகன்றை மாமலர்" ஐங்குறு. 456. (ஈ) "பாசிலை பொதுளிய புதறொறும் பகன்றை, நீலுண்............தோலெறி பாண்டிலின் வாலியமலர" (உ) "பகன்றை வான் மலர் பனிநிறைந்ததுபோற், பால்பெய்வள்ளஞ் சால்கைபற்றி" அகம். 217 : 6 - 8. 216 : 4-5. 3. (அ) "தண்கமழ் தேறல்" புறம். 24. 32. (ஆ) "தண்ணற வுண்களி நீ" கோவையார். 122. (இ) "மணங்கமழ் தேறல்" மது. 780. (ஈ) "தேங்கமழ் தேறல்" பெருங். (2) 14 : 61. 4. "வள்ளத் துறுநறவு வாக்குந, ரரவுசெறி யுவவுமதியென வங்கையிற் றாங்கி, யெறிமகர வலய மணிதிகழ் நுதலியர், மதியுணர மகளென வாம்பல்வாய் மடுப்ப" பரி. 10 : 75 - 78. (பிரதிபேதம்) 1வெள்ளிய வள்ளத்தாலே.
|