வெள்ளியவள்ளமென்பது அம்முச்சாரியையின் மகரங் கெட்டு அகரம் யகரவுடம்படு மெய்பெற்று நின்றது; "மென்மையு மிடைமையும் வரூஉங் காலை, யின்மை வேண்டு மென்மனார் புலவர்" (1) என்பதனால். அகன்றதுறை பரத்தையர்சேரியாகவும், அழகுபெறும்படி புதலொடு வந்து தாழ்ந்த (2) மணமில்லாத பகன்றைப்பூப்பாணர்முதலியவாயில்களோடே வந்து தங்கின அன்பில்லாத பரத்தையராகவும், அதனை உற நீண்ட தாமரை அப்பரத்தையரிடத்தே சேர்ந்த தலைவனாகவும், அத்தாமரை கள்ளைத் தீதென்று உணர்ந்துவைத்தும் அதனை உண்டு களிக்கின்றவள் முகம்போலத் தளைவிடுதல் அன்பில்லாத மகளிரிடத்துப் பெறுகின்ற இன்பநுகர்ச்சி தீதென்று உணர்ந்துவைத்தும் அதனை நுகர்ந்து மகிழ்கின்ற தலைவனாகவும் உள்ளுறை யுவமங் கொள்க. முகம்போல வென்னும் ஏனை யுவமம் கருப் பொருட்குச் சிறப்புக்கொடுத்து நின்றது. 6 | (3) நோதக்கா யெனநின்னை நொந்தீவா ரில்வழித் தீதிலேன் யானெனத் தேற்றிய வருதிமன் ஞெகிழ்தொடி யிளையவ (4) ரிடைமுலைத் தாதுசோர்ந் திதழ்வனப் பிழந்தநின் (5) கண்ணிவந் துரையாக்கால் |
எ - து: நீ நீங்குதலான் நெகிழ்ந்த தொடியினையுடைய பரத்தையருடைய முலையிடையிலே தாதுகள் உதிர்ந்து இதழ்கள் அழகிழந்த நின் கண்ணி நினக்கு உட்பகையாய்வந்து நின் பரத்தைமையை எமக்கு உரையாத பொழுது நீ யாங்கள் வெறுக்கத்தக்க பரத்தைமையை 1யென்று ஒருகாலத்தும் நின்னை வெறுப்பார் இல்லாத இடத்தே யான் தீதிலேனென்று தேற்றுதற்கு வருவாய்; அதனாற் பெற்றதென் ? எ - று. 10 | கனற்றிநீ செய்வது கடிந்தீவா ரில்வழி 2மனத்திற்றீ திலனென மயக்கிய வருதிம |
1. தொல். புணரியல். சூ. 28. 2. "பேரிலைப் பகன்றைப் பொதியவிழ் வான்பூ, வின்கடுங் கள்ளின் மணவில் கமழும், புன்கண் மாலையும்" என்று (குறுந். 330.) காணப்படுவது ஆராயத்தக்கது; பகன்றை, பெருங்கையா லென்னும் கொடியென்பர் அடியார்க்கு நல்லார். சிலப். 13 : 157. உரை 3. "நின்னணங் குற்றவர் நீ செய்யுங் கொடுமைக, ளென்னுழை வந்து நொந் துரையாமற் பெறுகற்பின்" கலி. 77: 14- 5. 4. "இடைமுலை" கலி. 12 : 13. 5. "கரிகூறுங் கண்ணியை யீங்கெம்மில் வருவதை" கலி. 78 : 14. (பிரதிபேதம்) 1என்று மொருகாலத்து நின்னை, 2மனத்தினிற் றீதில னென்மயக்கி வருதிமன்.
|