(1) னலமர லுண்கண்ணா ராய்கோதை குழைத்தநின் மலர்மார்பின் மறுப்பட்ட சாந்தம்வந் துரையாக்கால் எ - து: தம்வயத்தராதற்கு உரியாரைத் தேடிச் (2) சுழல்கின்றமையுண் கண்ணினையுடைய பரத்தையருடைய அழகிய மாலைகள் முயக்கத்தாற் குழைவித்த நின் மலர்ந்த மார்பிற் பூசின பாடழிந்த சந்தனம் நினக்கு உட்பகையாய் வந்து நின் பரத்தைமையை எமக்கு உரையாதபொழுது நெஞ்சைக்கனலப்பண்ணி நீ ஒழுகுகின்ற பரத்தைமையை வெறுப்பாரில்லாத இடத்தே யான் தீதுடையே னல்லேனென்று எங்கள் மனத்திடத்தே ஊடலுணர்த்துதற்கு வருவாய்; அதனாற் பெற்றதென்? எ - று. 14 | என்னைநீ செய்யினு 1முரைத்தீவா ரில்வழி (3) முன்னடிப் பணிந்தெம்மை யுணர்த்திய வருதிம னிரைதொடி நல்லவர் (4) துணங்கையுட் டலைக்கொள்ளக் கரையிடைக் கிழிந்தநின் காழகம்வந் துரையாக்கால் |
எ - து: நிரைத்த தொடியினையுடைய பரத்தையர் ஆடுந் துணங்கைக் கூத்திடத்தே நீ சென்று (5) தலைக்கைகொடுத்தற் றொழிலை நின்னிடத்தே கொள்கையினாலே அவர் 2சிலம்பு தொடக்கிக் கரையிடத்தே கிழிந்த நின்னுடைய நீல ஆடை நினக்கு உட்பகையாய் வந்து நின்பரத்தைமையை எமக்கு உரையாதபொழுது எப்படிப் பெரிய குறைகளை நீசெய்யினும் இக்குறைகளைச்
1. (அ) கலி. 67 : 10 - 11; (ஆ) கலி. 12 : 13. (இ) பு-வெ. பெருந். 12. 2. (அ) "அலமர லமருண்க ணந்நல்லார்" கலி. 113 : 2. (ஆ) "மண்ணிற் பாய்வன மாதிரஞ் சூழ்வன, விண்ணிற் றாவுவ வீதியிற் செல்வன, வெண்ணிற் பல்பொரு ளிச்சைகொள் வேசியர், கண்ணிற்கொப்பன கந்துக ராசியே" கந்த. அக்கினி முகாசுரன்வதை. 24. (இ) "கூற்ற மோகொடும் பகழியோ வெனக்குளிர் முகத்துத், தோற்று வாள்விழி கொட்புறு தொழிலினை நோக்கி, யாற்றல் சான்றதன்னெஞ்சமு மலமர முனிவன், மாற்றி னானெழு விழைவினை மாற்றிடு முன்னர்" விநாயக. அங்காரக. 3. 3. (அ) "முன்னடி யொல்கி யுணர்த்தினவும்" (ஆ) "தலையுற முன்னடிப் பணிவான் போலவும்" (இ) "மணங்கம ழைம்பாலா ரூடலை யாங்கே, வணங்கி யுணர்ப்பான் றுறை" கலி. 92 : 56; 128 : 17; 131 : 39 - 40. 4. இந்நூற்பக்கம் 425 : 1 - ஆம் குறிப்புப் பார்க்க. 5. "மெல்லிணர்க் கண்ணி மிலைந்த மைந்த, ரெல்வளை மகளிர் தலைக்கை தரூஉந்து" புறம். 24 : 8 - 9. (பிரதிபேதம்) 1உணர்ந்தீவார், 2சிலம்புதுடக்கி.
|