பக்கம் எண் :

மூன்றாவது மருதம்443

எனவாங்கு;

13 கிண்கிணி மணித்தாரோ டொலித்தார்ப்ப வொண்டொடிப்
பேரமர்க் கண்ணார்க்கும் படுவலை யிதுவென
வூரவ ருடனகத் திரிதருந்
தேரே முற்றன்று நின்னினும் பெரிதே.

இது பரத்தையிற்பிரிந்து வந்த தலைவனோடு ஊடிய காமக்கிழத்தியை அவன் இவ்வகையன கூற நீ ஏமுற்றாயோவென்றாற்கு அவள் கூறியது.

இதன் பொருள்.


(1) பொய்கைப்பூப் புதிதுண்ட (2) வரிவண்டு கழிப்பூத்த
நெய்தற்றா தமர்ந்தாடிப் பாசடைச் 1சேப்பினுட்
செய்தியற்றி யது 2போல வயற்பூத்த தாமரை
3மைதபு கிளர்கொட்டை மாண்பதிப் படர்தரூஉங்
(3) கொய்குழை யகைகாஞ்சித் துறையணி நல்லூர

எ - து: பொய்கையிடத்துப் பூவினுடைய தேனையுண்ட வரியினையுடைய வண்டு கழியிடத்துப் பூத்த நெய்தற்பூவிற்றாதை மனம்பொருந்தி நுகர்ந்து


1. (அ) "வெறிகொ ளினச்சுரும்பு மேய்ந்ததோர் காவிக், குறைபடுதேன் வேட்டுங் குறுகும் - நிறைமதுச்சேர்ந்,
துண்டாடுந் தன்முகத்தே செவ்வி யுடையதோர், வண்டா மரைபிரிந்த வண்டு" தொல். அகத். சூ. 51. இள. மேற். (ஆ) "முழுநீர்ப் பொய்கையுட் பொழுதொடு விரிந்த, செழுமலர்த் தாமரைச் செவ்விப் பைந்தாது, வைக லூதா வந்தக் கடைத்து, மெவ்வந் தீராது நெய்தற் கவாவும், வண்டே யனையர் மாந்த ரென்பது, பண்டே யுரைத்த பழமொழி மெய்யாக், கண்டே னொழிகினிக் காமக்கலப்பென" பெருங். (2) 16 : 32-38 (இ) "செங்கதிர் விரித்தசெந் திருமலர்த் தாமரைப், பெருந்தே னருந்தியெப் பேரிசை யனைத்தினு, முதலிசைச் செவ்வழிவிதிபெறப் பாடியத், தாதுடறுதைந்த மென் றழைச்சிறை வண்டினம், பசுந்தாட் புல்லிதழ்க் கருந்தா ளாம்பற், சிறிதுவா மதுவமுங் குறைபெற வருந்தியப், பாசடைக் குலகவர் பயிலாத்தாரியை, மருளொடு குறிக்கும் புனலணி யூர" கல். 92 : 16 - 23. (ஈ) "கன்னி நறுந்தேறன் மாந்திக் கமலத்தின், மன்னித் துயின்ற வரிவண்டு, பின்னையும் போய்நெய்தற் கவாவு நெடுநாட" நள. கலிநீங்கு. 49.

2. இந்நூற்பக்கம் 428 : 6 - ஆம் குறிப்புப்பார்க்க.

3. குழை யென்னு முறுப்பு மரத்திற்கு வருதற்கு "கொய்குழை............நல்லூர" என்பது மேற்கோள்; தொல். மரபி. சூ. 87. பேர். நச்.

(பிரதிபேதம்) 1செப்பினுள், 2போலும் வயற், 3மைதவழ்புகிளர்.