பக்கம் எண் :

444கலித்தொகை

வயலிடத்துப் பசிய இலையினையுடைய தான்றோன்றுங் கிழங்கிடத்தைக்கை செய்து பண்ணினதுபோலப் 1பூத்த, கரிய இதழ்பொதிந்த, நீங்குகின்ற தாமரைப்பூவினது விளங்குகின்ற கொட்டையாகிய மாட்சிமையையுடைய பதியிடத்தே மீண்டுவரும் (1) மகளிர்கொய்யுத் தழை தளிர்க்கின்ற காஞ்சிமரத்தினையுடைய துறையணிந்த நல்ல ஊரனே! எ - று.

மைதபுதாமரையெனக் 2கூட்டுக. தேரேற்றிக்கொண்டுவந்த பரத்தையரை முற்படநுகர்ந்து பின்னர்ச் சேரிப்பரத்தையரை நுகர்ந்து விடியற் 3காலத்துத் தலைவிமனைவயிற் செல்கின்ற ஊரனென்று காமக்கிழத்தி புலந்துகூறினாள்.

6 (2) அன்பில னறனில னெனப்படா னெனவேத்தி
நின்புகழ் பலபாடும் பாணனு மேமுற்றான்

எ - து: அவன் அன்புடையனல்லனென்றும் அறனுடையனல்லனென்றும் நீ சொல்லப்படானென்று நின்னைப் புகழ்ந்து நின் புகழ் பலவற்றையும் பாடிக்காட்டும் பாணனும் பித்தேறினான். எ - று.

8 (3) நஞ்சுயிர் செகுத்தலு மறிந்துண்டாங் களியின்மை
கண்டுநின் மொழிதேறும் பெண்டிரு மேமுற்றார்

எ - து: நஞ்சு தன்னை நுகர்ந்தாருயிரைப் போக்குதலையும் அறிந்து வைத்து உண்டாற்போல நின் மனக்கருத்து அருளின்றி வருத்துதலைக்கண்டு 4வைத்தும் பின்னும் நின்பொய்மொழியை மெய்யாகத்தெளியும்பரத்தையரும் பித்தேறினார். எ - று.

5செகுத்தலுமென்ற உம்மை, சிறப்பு.


1. தகைந்த காஞ்சி யென்பதற்கு "விளையாட்டுமகளிர் பலரும் தளிரும் முறியும் தாதும் பூவும் கோடலாற் சிதைவுபட்டுக்கிடக்கின்ற காஞ்சி" என்று எழுதியிருக்கும் விளக்கம் இங்கே அறியத்தக்கது; பதிற். 23 : 19 - உரை.

2 (அ) "அருளு மன்பு நீக்கித் துணைதுறந்து, பொருள்வயிற் பிரிவோ ருரவோராயி, னுரவோ ருரவோ ராக,
மடவ மாக மடந்தை நாமே." குறுந். 20. (ஆ) "அன்பு மறனு முடைத்தாயி னில்வாழ்க்கை, பண்பும் பயனு மது" குறள். 45.

3. (அ) "முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பி, னஞ்சு முண்பர் நனி நா கரிகர்" நற். 355 : 6 - 7. (ஆ) "பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க, நாகரிகம் வேண்டு பவர்" குறள். 580.

(பிரதிபேதம்) 1பூத்த தாமரைப்பூவினது, 2கூட்டிக கரியவிதழ் பொதிந்த நீங்குகின்ற தாமரையென்க. தேறேற்றி, 3காலத்துத் தலைத்தலைவி, 4வைத்துப்பின்னும், 5செகுத்தலுமென வும்மை சிறப்பு.