பக்கம் எண் :

மூன்றாவது மருதம்445

10 (1) முன்பகற் றலைக்கூடி (2) நன்பக லவணீத்துப்
பின்பகற் பிறர்த்தேரு நெஞ்சமு மேமுற்றாய்

எ - து: நாட்காலமெல்லாம் ஒருத்தியிடத்தே கூடியிருந்து உச்சிக்கால மெல்லாம் அவளைக்கைவிட்டுப் பலரிடத்தே சென்று அந்திக்காலத்திற் கூடுதற்கு வேறுசிலரை ஆராயும் நின்னெஞ்சமும் பித்தேறினாய். எ - று.

அவளையென்னும் இரண்டாவது 1"ஒழியாதுவருதலும்" (3) என்றதனாற் சிறுபான்மை ஒழிந்துநின்றது. நெஞ்சமுமேமுற்றாயெனச் சினைவினை முதலொடு முடிந்தது. உம்மைகள், எண்ணும்மை.

2எனவாங்கு, அசை.

13 கிண்கிணி மணித்தாரோ டொலித்தார்ப்ப வொண்டொடிப்
பேரமர்க் 3கண்ணார்க்கும் படுவலை யிதுவென
வூரவ ருடனகத் திரிதருந்
(4) தேரே முற்றன்று நின்னினும் பெரிதே

எ - து: 4சதங்கை தண்டை சிறுமணிகள் கோத்த தாருடனே ஒலியெழுந்து ஆரவாரிப்ப ஒள்ளிதாகிய தொடியினையுடைய பெருத்து (5) அமர்த்த


1. "முற்பகல் பிற்பக லென்பன, பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத்தொகை" என்பர். பரி. குறள். 319.

2. உச்சிப்பொழுது என்னும் பொருளில் நண்பகலென்பதே யன்றி நன்பகலென்பதும் வருமென்பதை, "நன்பகலந்தி" (பொருந. 46.) "நன்பகலுங் கூகை நகும்" (பு - வெ. வஞ்சி. 4) என்புழி நன்பகலென்பதற்கு எழுதப்பெற்றிருக்கும் உரையும் "பைங்கருங் காலிச் செங்களி யளைஇ, நன்பகற் கமைந்த வந்துவர்க் காயு, மிருங்கண் மாலைக்குப் பெரும்பழுக் காயும், வைகறைக் கமையக் கைபுனைந் தியற்றிய, வின்றே னளைஇய விளம்பசுங்காயும்"
(பெருங். (3) 14 : 81 - 85.) என்று வரும் பகுதியும் வலியுறுத்தும்.

3. தொல். தொகை. சூ. 15.

4. (அ) ஏமுறுதல் என்பதற்கு மயக்கமுறுதலென்று பொருள்கூறி, "தேரே முற்றன்று நின்னினும் பெரிதே" என்பதனை மேற்கோள் காட்டினர் நச்; தொல். களவி. சூ. 18. சீவக. 2841. (ஆ) பித்துறுதலென்று பொருள்கூறுவர், பரி; குறள். 873.

5. அமர்க்க ணென்பதற்கு, (கலி. 75 : 7) போரைச்செய்யுங் கண்ணென்று எழுதியிருக்கும் உரை இங்கே அறிதற்பாலது.

(பிரதிபேதம்) 1ஒழியா தென்றதனாற் சிறுபான், 2எனவாங்கு ஆங்கசை, 3கண்ணார்க்குப் படுவலை,
4
சதங்கைத்தண்டை.