10 | புதுவோர்ப் புணர்தல் வெய்ய னாயின் வதுவை நாளால் வைகலு மஃதியா னோவேன் றோழி நோவாய் நீயென வெற்பார்த் துறுவோய் கேளினித் தெற்றென |
எ - து: நீர் நிறைந்த செய்யில் வளர்ந்த ஒத்த இதழையுடைய நெய்தற் பூவோடே ஆம்பலினது 1நிரைத்த இதழையுடைய பூக்களைப்பறித்துக்கோடற்குத் தலைமை நிறைந்த சிவந்த சிலம்புமுதலியன ஒலிப்ப ஓடுகின்ற விளையாட்டினை யுடைய மகளிருடைய ஆரவாரத்திற்கு வெருவியெழுந்து ஆரல்மீனையுண்டலை யுடைய அழகிய சிறகினையுடைய பறவைத்திரள் உயர்ந்த மரத்தில் உயர்ந்த கொம்பிலே ஏறியிருந்து போரைச்செய்யுங் கண்ணினையுடைய மகளிர் தம்மை 2அலைத்த அந்தநோயை அம்மகளிருடைய சுற்றத்தார்க்குக் கூறுவனபோலப் பலகுரலாலே பலகாலுஞ் சொல்லும் உயர்ந்த போர்களால் உண்டாகிய ஆரவாரத்தினையுடைய நல்ல ஊரினையுடையவன் புதிய பரத்தையரை மணஞ்செய்தலைஎக்காலமும்விரும்புவனாயின், அதற்கேற்ப (1) நாள்களும் வதுவைக்கு உரிய நாளாயிருக்குமாயின், அவ்வொழுக்கத்திற்குத்தோழீ! யான் வருந்துவேன்; நீ அதற்கு ஒருகாலமும் வருந்தாயெனச் சொல்லி என்னைப் பார்த்து வருத்தமுறுகின்றவளே! இனி அவன் செய்தியை நின் நெஞ்சு தெளியும் படியாகக் கேள். எ - று. உயர்ந்தாரோடு இழிந்தாரையும் தத்தம் மனைகளினின்றுங் கொண்டு போந்து வருந்த விடுதற்கு விறலி முதலிய வாயிலோர் செல்கின்ற ஆர வாரத்தைக் கேட்டு வெருவி அவனை அரிதிற்பெற்றுழி நுகர்ந்து வருந்தி யிருக்கின்ற சேரிப்பரத்தையர் பின்பு அவன் செலுத்துகின்ற வாயில்கட்கு எய்தாத இடங்களிலே புலந்திருந்து அவன் வாயில்கள் தம்மை வருத்தின நோவை அவர் சுற்றத்தார்க்குப் பலகாலும் முறைப்பட்டுக்கூறும் ஊரனென உள்ளுறையுவமங் கொள்க. 14 | (2) 3எல்லினை வருதி யெவன்குறித் தனையெனச் சொல்லா திருப்பே னாயி 4னொல்லென |
1. நல்ல நாளில் வதுவை செய்தல் மரபென்பதை, கலி. 93 : 12 - 4 - ஆம் அடிகளின் குறிப்பாலுணர்க. 2. "இடை நிலைப்பாட்டே தரவகப்பட்ட மரபினது" என்புழி அகப்படுதல் என்பதற்கு அகம்புறமென்றிரு கூறு செய்தவழி முற்கூற்றினுட் படுதல்; முன், காலமுன்னாம்; எனவே ஆறடிமுதல் இரண்டடிகாறும் வரப்பெறுமென்று கொள்க......................பன்னீரடி யிகந்த "நீரார் செறுவின்" என்ற தரவிற்கும் "எல்லிவருதி.................மறைப்ப (பிரதிபேதம்) 1நிரைந்தவிதழை, 2அலைக்க, 3வெள்கினைவருதி, எல்லிவருதி, 4எல்லென.
|