22 | பகலாண் டல்கினை பரத்த வென்றியா னிகலி யிருப்பே னாயிற் றான்றன் முதல்வன் பெரும்பெயர் முறையுளிப் பெற்ற புதல்வற் புல்லிப் பொய்த்துயி றுஞ்சும்; ஆங்க; | 27 | விருந்தெதிர் கொள்ளவும் பொய்ச்சூ ளஞ்சவு மரும்பெறற் புதல்வனை முயங்கக் காணவு மாங்கவிந் தொழியுமென் புலவி தாங்கா தவ்வவ் விடத்தா னவையவை காணப் பூங்கண் மகளிர் புனைநலஞ் சிதைக்கு மாய மகிழ்நன் பரத்தைமை நோவேன் றோழி கடனமக் கெனவே. |
இது தலைவன் நாடோறும் வதுவையயர்ந்து வந்தால் யான்அதற்குப் பொறேனாக நீ ஊடலின்றி அவன் வந்தபொழுதே எதிர் கொள்ளுதியென்று தோழிக்குத் தலைமகள் அதற்குக்காரணங் கூறியது. இதன் பொருள். (1) 1நீரார் செறுவி னெய்தலொடு நீடிய நேரித ழாம்ப னிரையிதழ் 2கொண்மார் சீரார் சேயிழை யொலிப்ப வோடு மோரை மகளி ரோதை 3வெரீஇயெழுந் 5 | தார லார்கை யஞ்சிறைத் தொழுதி யுயர்ந்த பொங்க 4ருயர்மர மேறி யமர்க்கண் மகளி 5ரலப்பிய வந்நோய் தமர்க்குரைப் பனபோற் பல்குரல் பயிற்று முயர்ந்த 6போரி னொலிநல் லூரன் |
1. (அ) தரவு தனக்குப் பேரெல்லையாகிய பன்னிரண்டடியை யிகந்து பதின்மூன்றடியான் வந்ததற்கு, "நீரரர்.............தெற்றன" என்னும் இப்பகுதி மேற்கோள்; தொல். செய். சூ. 133. நச். பன்னிரண்டடியின் இகந்தன துள்ளலோசையான் வாராமையின் இலேசினாற் கொண்டாளென்பர் பேர். (ஆ) "நீர்ச்செறுவி னீணெய்தல்" பட். 11. இந்நூற்பக்கம் 411 : 3 - ஆம் குறிப்பும் 423 : 1 - ஆம் குறிப்பும் பார்க்க. (பிரதிபேதம்) 1நீரேர் செறுவின், 2கொய்ம்மார், 3வெரீஇயாரல், 4ஊர்மரம், 5அலைப்பிய, 6போர்வினொலி.
|