(1) தச்சா றாக 1வுணரிய வருபவன் பொய்ச்சூ ளஞ்சிப் புலவே னாகுவல் எ - து: முயக்கத்தால் வாடிய பூவோடே எம்மனையிடத்து வாராதே கொள்ளென்று கூறி யான் ஊடியிருப்பேனாயின் 2நீடியாமல், (2) தன்பொய்ச் சூளுக்கு நாம் அஞ்சும் அச்சமே தான் 3ஊடலுணர்த்தும் வழியாக ஊடலுணர்த்துதற்கு வருபவனுடைய பொய்யாகிய சூளுக்கு அஞ்சிப் புலவேனாயிருப்பேன். எ - று. "அஞ்சியச்சுறுத்தலும்" (3) என்றாற்போல (4) அச்சம் அச்சு என விகாரமாய் நின்றது. 22 | பகலாண் டல்கினை பரத்த வென்றியா னிகலி யிருப்பே னாயிற் றான்றன் (5) முதல்வன் பெரும்பெயர் 4முறையுளிப் பெற்ற புதல்வற் புல்லிப் பொய்த்துயி றுஞ்சும் |
1. "தெய்வ மஞ்சல்" என்னும் மெய்ப்பாட்டிற்கு, "அச்சாறாக.........ஆகுவல்" என்பது மேற்கோள்; தொல். மெய்ப். சூ. 24. பே. இ - வி. சூ. 580. 2. "என்னை யருளி யருண்முருகு சூள்சூளி, னின்னை யருளி லணங்கான் மெய் வேறின்னும், விறல்வெய்யோ னூர்மயில் வேனிழ னோக்கி, யறவ ரடிதொடினு மாங்கவை சூளேல், குறவன் மகளாணை கூறேலா கூறேலைய சூளி னடிதொடு குன்றோடு, வையைக்குத் தக்க மணற்சீர்சூள் கூறல்." பரி. 8 : 65 - 71. 3. தொல். கள. சூ. 23. இதனுரையில் இவர் 'அஞ்சுதல் அச்சென்றாயிற்று' என்று எழுதியிருக்கிறார். 4. (அ) "அச்சற் றேம மாகி" (பதிற். 90 : 2) என்புழி, அச்சமென்பது கடைக்குறைந்த தென்று எழுதியிருத்தலும். (ஆ) "நகையச் சாக நல்லமிர்து கலந்த" பரி. 3 : 33. (இ) "அச்சிடை யிட்டுத் திரியின்" பழ. 291. என்பவையும் ஈண்டறிதற்பாலன. 5. "புதல்வன் பொன்மகுடம் பொறுத்தலான், முதல்வன் பேருவகைக்கு முந்துவா, னுதவும் பூமகள் சேர வொண்மலர்க், கதவஞ்செய்ய கரத்தி னீக்கினான்" கம்ப. அரசியற். 21. என்பதனால் முதல்வனென்பது தகப்பனார் பெயராய் வருதலையும் "அறைதரு மாந்தா தாமுன முயிர்த்தோ ரம்பரீ டன்புரு குச்ச, னெறியுறு புகழ்சார் தருமுசு குந்த னிகழ்த்துமிம் மூவரின் முன்னோன், குறைவறு குணஞ்சாலொருமகவென்னக்குலவி........ பிதாமகனாகு, முறைமையின் யுவனாச் சுவனெனு நாம மூதுல கிற்பெறீஇச் சிறந்தான்" பாக. (பிரதிபேதம்) 1புனரிய, 2நீட்டியாமல், 3ஊடலுண ராததும் வழி, 4முறையுளிபெற்ற.
|