பக்கம் எண் :

மூன்றாவது மருதம்451

எ - து: 1பரத்தைமையையுடையவனே! பகற்பொழுதெல்லாம் பரத்தையர் மனையிலே தங்கினாயென்று கூறி யான் அவனுடனே மாறுபட்டிருப்பேனாயின், தான் தன்னுடைய தந்தையுடைய பெரிய பெயரைப்பெறு (1) முறையாற் பெற்றபுதல்வனைத் தழுவிப் (2) பொய்யாகியதுயிலைக்கொண்டுவருந்தும். எ - று.

துஞ்சுதல் - இறந்துபடுதல், 'பகலாண்டல்கினை' எனவே உண்டிக் காலத்தும் வந்திலையென்றாள்.

2ஆங்க, அசை.

27 (3) விருந்தெதிர் கொள்ளவும் பொய்ச்சூ ளஞ்சவு
மரும்பெறற் புதல்வனை முயங்கக் காணவு
3மாங்கவிந் தொழியுமென் புலவி தாங்கா
4தவ்வவ் விடத்தா னவையவை காணப்
பூங்கண் மகளிர் புனைநலஞ் சிதைக்கு
(4) மாய 5மகிழ்நன் பரத்தைமை
நோவேன் றோழி (5) கடனமக் கெனவே

(9) அரிச்சந்திரன்கதையுரைத்த. 1. என்பதனாலும் "எந்தை பெயரனை யாங் கொள்வேம்" கலி. 81 : 35. எனப் பின்பு இந்நூலுள்ளே வருதலாலும் ஒருவன் தன்தகப்பனார்பெயரைத் தன்பிள்ளைக்கு இடுதல் மரபென் பதையும் அறிக.

1. உளியென்பது மூன்றும்வேற்றுமைப்பொருள்படுவதோ ரிடைச்சொல்.

2. (அ) "சிந்தைமெய்த் திரு வினேகப், பூவிய லமளி மேலாப் பொய்யுறக் குறங்குவானை" கம்ப. ஊர்தேடு. 213. (ஆ) "பொலங்கொடி நாணினோடும் பொய்த்துயில் கூர்ந்தா ளன்றே" நைடத. மணம். 42.

3. கற்பென்னுங் கைகோளில் உணர்தலுக்கு "விருந்தெதிர்........புலவி" என்னும் இப்பகுதி மேற்கோள். தொல். செய். சூ. 187. பேர். நச்.

4. (அ) "அன்புடைக் கணவ ரழிதகச் செயினும், பெண்பிறந் தோர்க்குப் பொறையே பெருமை" பெருங். (4) 14 : 989. (ஆ) "சிறுமையும் பெருமையுந் தெரிந்தி லாயெனப், பொறுமையொன் றின்றியே பொங்குங் கங்கையையறமல குலமினார்க் கன்பர் பாற்செயுந், திறமல சினமென வருணன் றேற்றுவான்" திருக்கழுக்குன்றப். தீர்த்தச்சருக்கம். 23.

5. புரையறந் தெளிதலாவது: தனக்கேற்ற அறம் இன்னதெனத் தெளிதல்; "கடனமக்கெனவே யென்றவழி, 'பரத்தைமைகண்டு புலவாது *அதனைப்பொறுத்தல் [*] இதனைப் பொத்துவது என்றும் பிரதிபேதம்.

(பிரதிபேதம்) 1பரத்தையையுடையவனே, 2எனவாங்கு ஆங்கு அசை, ஆங்கசை, 3ஆங்கலந் தொழியும், 4அவ்வவிடத்தான், 5மகிழ்ந.