எ - து: தோழீ! பூப்போலுங் கண்ணையுடைய மகளிருடைய கைசெய்த நலத்தைக் கெடுக்கும் பொய்யைவல்ல மகிழ்நனது 1பரத்தைமையாலேவதுவை யயர்ந்து வந்த மனைதோறும் அவர் புலவியாற் செய்த வடுக்களைக் கண்டிருக்க நமக்கு முறைமையாயிற்றென்று கருதி யான் நொந்திருப்பேன்; ஆயின் யான் இங்ஙனமாகவும் விருந்தினரை எதிர்கொள்ளுதலைச் செய்கையினாலும் அவன் பொய்யாகிய சூளால் நமக்கு வருத்தம் வருமென்று அஞ்சுகையினாலும் பெறுதற்கரிய புதல்வனை முயங்கிக்கொண்டு வருந்தக்காண்கையினாலும் என்னெஞ்சு புலவியை முழுக்கத் தாங்காது; 2தாங்காதபடியாலே அவ்விடத்துப் புலவி கெட்டுப்போகாநிற்கும்; இதுகாண் யான் உறுகின்ற துன்பமென்றாள். எ - று. இதனால், பிறர் இகழ்ந்தமைபற்றித் தலைவிக்கு எள்ளல் பிறந்தது. இது "தரவே தானு நாலடி யிழிபா, யாறிரண் 3டுயர வேறவும் பெறுமே" (1) என்றதனில் ஏறவுமென்ற உம்மையாற் சிறுபான்மை பதின்மூன்றடியும் வருமென்றலிற் பதின்மூன்றடியான் வந்த தரவும் 4தாழம்பட்ட ஓசையின்றித்தரவகப்பட்ட இடைநிலைப்பாட்டும் ஆங்கவென்னுந் 5தனிச்சொல்லும் ஏழடிச்சுரிதகமும் பெற்ற ஒத்தாழிசைக்கலி. (10) (76.) | புனையிழை நோக்கியும் புனலாடப் புறஞ்சூழ்ந்து மணிவரி தைஇயுநம் மில்வந்து வணங்கியு நினையுபு வருந்துமிந் நெடுந்தகை திறத்திவ்வூ ரிணையளென் றெடுத்தோதற் கனையையோ நீயென வினவுதி யாயின் விளங்கிழாய் கேளினி; | 6 | செவ்விரல் சிவப்பூரச் சேட்சென்றா யென்றவன் பௌவநீர்ச் சாய்க்கொழூதிப் பாவைதந் தனைத்தற்கோ கௌவைநேர யுற்றவர் காணாது கடுத்தசொல் லொவ்வாவென்றுணராய்நீ யொருநிலையே யுரைத்ததை; | 10 | ஒடுங்கியாம் புகலொல்லேம் பெயர்தர வவன்கண்டு நெடுங்கய மலர்வாங்கி நெறித்துத்தந் தனைத்தற்கோ விடுந்தவர் விரகின்றி யெடுத்தசொற் பொய்யாகக் கடிந்தது மிலையாய்நீ கழறிய வந்ததை; |
இல்லுறைமகளிர்க்கு இயல்பென்னும் அறத்தினானே' எனக்கூறியவாறு கண்டுகொள்க'' என்பர், இளம்; தொல். மெய்ப். சூ. 24. 1. தொல்: செய். சூ. 133. இந்நூற்பக்கம். 447 : 1 - ஆம் குறிப்புப் பார்க்க. (பிரதிபேதம்) 1பரத்தமையாலே, 2நீங்காத படியாலே, 3உயர்பேற்பவும் படுமே, உயர்பேறவும்பெறுமே, உயர்வென்றறையவும் படுமே. 4தாழப்பட்ட, 5தனி நிலைச்சொல்லும்.
|