கயத்தின் மலரைப் பறித்துப் 1புறவிதழையொடித்துத் தந்த அச்சிற்று பகாரத்திற்கோ? எ - று. தந்த, விடுத்த : இவை விகாரம். 14 | வரிதேற்றாய் நீயென வணங்கிறை யவன்பற்றித் தெரிவேய்த்தோட்கரும்பெழுதித் தொய்யில்செய் தனைத்தற்கோ புரிபுநம் மாயத்தார் பொய்யாக வெடுத்தசொல் (1) 2லுரிதென வுணராய்நீ 3(2) யுலமந்தாய் போன்றதை |
எ - து: காவல்புரிந்து காக்கின்ற நம் ஆயத்தார் காவல் 4பொய்யாய்ப் போம்படி இவ்வூரார் பலகாற் கூறிய கூற்றை நீ பொய்யென்றுணராயாய் இவட்கு உரித்தென்றுகருதி 5அலமந்தாரைப்போலே இருந்தது நீ தொய்யிலெழுத அறியாயென்று கூறி வளைந்த முன்கையை அவன் பிடித்துத் தெரிந்தவேய்போலுந் தோளிலே கரும்பைஎழுதித்தொய்யிற்குழம்பான் (3) மற்றும் எழுதுதற்கு உரியனவற்றை எழுதின அச்சிற்றுபகாரத்திற்கோ? எ - று. செய்த, உரித்து : இவை விகாரம். 6எனவாங்கு. எ - து: என்று யான் நினக்குக் கூறும்படியாக. எ - று. ஆங்கு, அசை. 19 | அரிதினி யாயிழா யதுதேற்றல் புரிபொருங் கன்றுநம் வதுவையு ணமர்செய்வ தின்றீங்கே தானயந் திருந்த திவ்வூ ராயி னெவன்கொலோ நாஞ்செயற் பால தினி. |
எ - து: 7நின்னெஞ்சிடத்து நிகழ்ந்த இக்காரியம் ஆயிழாய்! இனித் தெளிவித்தல் அரிது; இனி நம்முடைய வதுவையிடத்தே நஞ் சுற்றத்தார் சேரவிரும்பி அன்று செய்யுங் காரியத்தை இன்று இவ்விடத்தே இவ்வூர் விரும்பி யிருந்ததாயின் அதற்கு நாம் 8செய்தற்பகுதியையுடைய காரியம் எக்காரியம்? 9எ - று.
1. "உரிது" குறிஞ்சி. 65; பரி. 13 : 13்; 18 : 55; கலி. 92 : 7; அகம். 392 : 20. சிலப். 2 : 40. 2. "உலமரல், சொற்புற நடையாற் கொள்க" என்பர், நச்; தொல். உரி. சூ. 13. கலி. 83 : 2; 113 : 3; 137 : 5; 145 : 4; அகம். 18 : 13 : 395 : 10. கம்ப. மீட்சி. 224. 3. "கரும்பும் வல்லியும் பெருந்தோ ளெழுதி" சிலப். 2 : 29. (பிரதிபேதம்) 1புறவிதழொடித்து, 2உரித்தென, 3உலம்வந்தாய், 4பொய்யாம்படி, 5உலமந்தரை, 6ஆங்கசை. என அரிதினி, 7என்றுயான் நினக்கும் கூறும்படியாக நின், 8செய்தற்குப் பகுதியை, 9எனத்தலைவி தோழிக்குக் கூறினாள் பன்னூறு.
|