5 | (1) செவ்விரல் சிவப்பூரச் சேட்சென்றா யென்றவன் பௌவநீர்ச் (2) சாய்க்கொழுதிப் பாவைதந் தனைத்தற்கோ 1கௌவைநோ யுற்றவர் காணாது கடுத்தசொல் லொவ்வாவென் றுணராய்நீ யொருநிலையே (3) யுரைத்ததை |
எ - து: அலர்தூற்றுத லில்லாதபொழுது வருத்தமுற்றிருந்த மகளிர் இது தகாதென்று ஆராயாதே ஐயுற்றுக் கூறியசொல் இவட்குப் 2பொருந்தாவென்று அறியாயாய் நீயும் அவர்கள் சொன்ன நிலையிலேசொன்னது, சிவந்த விரல் மிகச் சிவப்புப் பரக்கும்படியாக நெடும்பொழுதுநின்று வாங்கினாயென்றுசொல்லி அவன் கடல் நீர் வந்து ஏறின கழியிடத்துத் தண்டான் கோரையைப் பறித்துக் கிழத்துப் பாவையாக்கித் தந்த அச்சிற்றுபகாரத்திற்கோ? எ - று. நீர், ஆகுபெயர் "ஒன்றேவேறே" (4) என்பதனால் வேற்றுநிலமாயிற்று. மருதத்துத் தலைவி நெய்தலில் நேர்பட்டமையின். 10 | ஒடுங்கியாம் புகலொல்லேம் பெயர்தர வவன்கண்டு நெடுங்கய மலர்வாங்கி நெறித்துத்தந் தனைத்தற்கோ 3விடுந்தவர் விரகின்றி யெடுத்தசொற் பொய்யாகக் கடிந்தது மிலையாய்நீ கழறிய (5) வந்ததை |
எ - து: தீயரென்று எல்லாருங் கைவிடப்பட்ட மகளிர் அங்ஙனங் கூறுதல் தீதென்று உணரவல்ல விரகின்றிப் பல்காற் கூறிய சொல் பொய்யாகக் கெடும்படி தவிர்ந்ததுவுமில்லையாய் நீ என்னைக் கோபித்தற்கு வந்தது கூசி யாம் உட்புகுதலைப்பொருந்தேமாய்மீள அவன் அதனைக்கண்டு நெடிய
1. (அ) ‘ஒவுறழ் நெடுஞ்சுவர் நாள்பல வெழுதிச், செவ்விரல் சிவந்த..........அரிவையர்’ பதிற். 68 : 67 - 9. (ஆ) "சேந்தக ணதிகமுஞ் செவந்து நீருக" கம்ப. மாரீசன்வதை. 38. (இ) "சிவந்த தளிர்க்கை சிவப்பூர" பாக, உருக்குமிணி யூடறீர்த்த. 2. 2. ''சாய்தாட் பிள்ளை தந்து கொடுத்தும்'' கல். 13 : 24. 3. "வளர்ந்ததை" என்பது வினைத்திரி சொல்லென்பதற்கு 'உரைத்ததை' என்பது மேற்கோள்; சீவக. 223 - உரை. 4. தொல். களவி. சூ. 2. இச்சூத்திர வுரையில் "செவ்விரல்.....................உரைத்ததை" என்னும் பகுதியை மேற்கோள்காட்டி ‘இது மருதத்துத் தலைவி களவொழுக்கங் கூறுவாள் பௌவநீர்ச் சாய்ப்பாவை தந்தா னொருவனென நெய்தனிலத்தெதிர்ப் பட்டமை கூறியது’ என்பர். நச். 5. வந்ததை யென்பது வினைமுற்றாக வருதல். கந்த. தேவகிரி. 22. (பிரதிபேதம்) 1கௌயையோவுற்றவர், 2பொருந்தாதென்று, 3விடுத்தவர்.
|