பக்கம் எண் :

மூன்றாவது மருதம்457

16 மாசற மண்ணுற்ற மணியேசு மிருங்கூந்தல்
வீசேர்ந்து வண்டார்க்குங் கவின்பெறல் வேண்டேன்ம
னோய்சேர்ந்த திறம்பண்ணி நின்பாண னெம்மனை
நீசேர்ந்த வில்வினாய் வாராமற் பெறுகற்பின்;
ஆங்க;
21 கடைஇய நின்மார்பு தோயல மென்னு
மிடையு நிறையு மெளிதோநிற் காணிற்
கடவுபு கைத்தங்கா நெஞ்சென்னுந் தம்மோ
டுடன்வாழ் பகையுடை யார்க்கு.

இது பரத்தையர் 1சேரியிற்சென்றுவந்ததலைவனோடு ஊடிய தலைவி ஊடறீர்கின்றாள் கூறியது.

இதன் பொருள்.

(1) இணையிரண் டியைந்தொத்த முகைநாப்பட் பிறிதியாதுந்
துணையின்றித் தளைவிட்ட தாமரைத் தனிமலர்
திருமுக மிறைஞ்சினள் வீழ்பவற் கினைபவ
(2) ளரிமதர் (3) மழைக்கண்ணீ ரலர்முலைமேற்றெறிப்பபோற்

5 றகைமலர்ப் பழனத்த புள்ளொற்ற வொசிந்தொல்கி
மிகநனி சேர்ந்தவம் முகைமிசை யம்மல
ரகவிதழ்த் தண்பனி யுறைத்தரு மூரகேள்

எ - து: தாமரையிற் றனித்த மலர்கள் இரண்டு தம்மிற் சேர்ந்து ஒப் பொத்த முகைகளுக்கு நடுவே நின்று 2வேறொரு பூச் சிறிதுந் தம் அருகு சேர்தலின்றி முறுக்கு 3அவிழ்ந்தன; தான் விரும்பப்பட்டவனுக்கு அழகினை யுடைய முகங் கவிழ்ந்து அழுகின்றவளுடைய செவ்வரியினையுஞ் செருக் கினையுங் குளிர்ச்சியினையுமுடைய கண்ணின் நீர் அடிக்கொண்டமுலைமேல்


1. இவ்வடி இணைமோனைக்கு மேற்கோள்; தொல். செய். சூ. 92. நச்.

2. இவ்வடி பொழிப்பு மோனைக்கு மேற்கோள். தொல். செய். சூ. 92. நச்.

3. (அ) "கண்ணீர்நிறுத்தலசெல்லாண், முலைமுகநனைப்ப" புறம். 143 : 13 - 14. (ஆ) "முலைமேல், வடிக்கேழ் மலர்நெடுங்கண் வார்புயலுங்காலும்" சீவக. 2049. (இ) "வாருங் கண்ணீர் வளர்கொங்கை வரைமே லருவி யெனவீழ" வில்லி. சூதுபோர். 231. (ஈ) "மைக்க ணில வாலி சிந்த வைகிய,மங்கை மென்மு லைத்த டத்து" நைடதம். கைக்கிளை. 1.

(பிரதிபேதம்) 1சேரிச்சென்றுவந்ததலைவனோடு மூடிய. 2வேறொரு பூக்கள். 3அவிழ்ந்தன வென முற்றாகவுரைக்க. அப்பூக்கள் அழகிணை ................... .ஊரனே.