பக்கம் எண் :

458கலித்தொகை

வீழ்வன 1போல, அப்பூக்கள் அழகினையுடைத்தாகிய மலர்களையுடைய பழனத்திடத்தனவாகிய பறவைகள் வந்து தாக்க மிகவுஞ் சாய்ந்து வளைந்து மிகவும் இணைந்த 2அந்த முகைகளின்மேலே தம்முடைய உள்ளிதழினின்ற நீரைத் துளித்தலைத் தருகின்ற ஊரனே! 3கேள். எ - று.

அம்மலர் புள்ளொற்ற ஒல்கி அம்முகைகளின்மேலே தண்பனி யுறைத்தரும் ஊர என்றதனாற் சேரிப்பரத்தையர் நின்மனைவியரை இகழ்ந்து வந்து அவர்மனை தோறும் நின்னைத் தேடுகையினாலே அவர் வருந்தி அழுகின்ற ஊரவெனத் தலைவி புலந்து 4கூறினாள்.

அவிழ்ந்தன என வினைமுற்றாக உரைக்க.

8 தண்டளிர்த் தகைபூத்த தாதெழி னலஞ்செலக்
(1) கொண்டுநீ மாறிய கவின்பெறல் வேண்டேன்ம
ணுண்டாதல் சாலாவென் னுயிர் 5சாத லுணர்ந்து (2) நின்
(3) பெண்டெனப் பிறர்கூறும் பழி மாறப் பெறுகற்பின்

எ - து: உண்டென்று கூறுதல் அமையாத என்னுயிர் அந்நிலையினும், நில்லாமற் சாதலை உணர்ந்துவைத்தும் நின் பெண்டென்று பிறர்கூறும் பழி போபாகப்பெறின், குளிர்ந்த (4) தளிரிடத்தே வீழ்ந்து அழகுபொலிவு பெற்றதாது


1. (அ) "பிறைனைக், கொலையொக்குங் கொண்டுகண்மாறல்" நான்மணி. 8. (ஆ) "கொண்டுகண் மாறல் கொடுமையிற் றுவ்வாது" முதுமொழி. 37.

2. (அ) "சுட்டுமுதலாகிய அன்னும் ஆனும், அவைமுதலாகிய பெண்டென் கிளவியும்" என்பதன் விசேடவுரையில் என்னை, ‘நின், பெண்டெனப் பிறர் கூறும் பழிமாறப் பெறுகற்பின்’ எனச் சான்றோர் கூறலின் பெண்டென்பதே பாடமென்றும் அப்பெண்டென்னுஞ் சுட்டு, "கடி சொ லில்லை" என்பதனால் பெண்டென நின்றது என்றும் கூறுவர் நச்; தொல். பெயரி. சூ. 9 (ஆ) தொல்காப்பியர் காலத்தே பெண்டென்னும் சொல் லுண்டென்பது, "வண்டும் பெண்டு மின்னொடு சிவணும்" "பெண்டென் கிளவிக் கன்னும் வரையார்" தொல். குற். சூ 15, 16. என்பவற்றால் விளங்குகின்றது. இச்சொல் பிறவற்றிலும் வந்துள்ளதேனும் ஐங்குறுநூற்றில் மிக வந்துள்ளது. (இ) 'இன்னன' என்பதனால் பெண்பாற் பெயர்களுள் பெண்டென்பது மொன்றென்று கூறி அதற்கு, "நின் பெண்டென.................பெறுகற்பின்" என்பதனை மேற்கோள்காட்டுவர், இ - வி. உரைகாரர்; இ - வி. சூ. 178.

3. ஒரூஉமோனைக்கு இவ்வடி மேற்கோளாகக் காட்டப்பெற்றிருக்கிறது; தொல். செய். சூ. 92. நச். வேறுசிலர் கருத்தின்படி இது கீழ்க் கதுவாய் மோனையாகும்.

4. இந்நூற்பக்கம், 158 : 3 - ஆம் குறிப்பில் இவ்விடத்துக்கு ஒத்தன ஒப்புநோக்கற்பாலன.

(பிரதிபேதம்) 1போல் அம்மலர் புள்ளொற்ற...............கூறினாள், தண்டளிர்த், 2அம்முகைகளின், 3கேனென்க, 4தான் விரும்பப்பட்ட, 5சாய்தலுணர்ந்து.