பக்கம் எண் :

மூன்றாவது மருதம்459

போலும் எழிலையுடைய மாமையுஞ் சுணங்கும் எம்மிடத்தினின்றும் போம் படியாக வாங்கிக்கொண்டு நீ பின்பு ஒருகாலுந்தாராதுவிட்ட அழகை யான் பெறுதலை விரும்பேன்; அதனாற் பெற்றதென்? பெண்டென்னும் பெயர் போகாதாயிற்றே! எ - று.

(1) பெறுகற்பின், வினைத்திரிசொல், மன், கழிவு.
சாதலுணர்ந்துமென்பது நெடுங்காலங் கைவிட்டமை தோன்ற நின்றது.
12 (2) பொன்னெனப் பசந்தகண் போதெழி னலஞ்செலத்
தொன்னல மிழந்தகண் டுயில்பெறல் வேண்டேன்ம
(3) னின்னணங் குற்றவர் நீசெய்யுங் கொடுமைக
ளென்னுழை வந்துநொந் (4) 1துரையாமற் பெறுகற்பின்

எ - து: கண்கள் பூவினது அழகையுடைய நலம்போம்படியாகப் (5)
பொன்போலப் 2பசந்தன; நின்னால் வருத்தமுற்ற பரத்தையர் நீ செய்யுங் கொடுமைகளை என்னிடத்தே வந்து வெறுத்துச்சொல்லாமையை யான் 3பெறின், இயற்கைநலத்தையும்இழந்த அக்கண் துயில்பெறுதலைவிரும்பேன்; அதனாற் பெற்றதென்? அங்ஙனம் என்னை இகழ்ந்து கூறுதல் 4தவிராரே!
எ - று.


1. ‘பெறுகற்பின்’ என்பதற்குப் பெறின் என்னும் பொருள் இங்கே காணப்படுகின்றது. இதைப்போலத் திருக்குறளிற் ‘செல்கற்பின்’ என ஒரு வாய்பாடுகாணப்படுகின்றது; அதற்கெழுதியுள்ளபொருளை நோக்க அது ‘செல்கிற்பின்’ என்றிருக்க வேண்டுமெனத் தோற்றுகிறது. இஃது ஆராய்தற்பாலது.

2. இந்நூற்பக்கம் 461 : 3 - ஆம் குறிப்புப்பார்க்க.

3. (அ) பரத்தையர்தாமுற்ற துன்பத்தினைக்கூறக்கேட்டதலைமகள் அதனைப் புலவியின்கண் தலைமகற்குக் கூறியதற்கு "நின்னணங்கு................பெறுகற்பின்" என்பது மேற்கோள்; தொல். பொருளி. சூ. 39. 'தம்முறு விழுமம்' இளம். (ஆ) "நோதக்கா யெனநின்னை நொந்தீவா ரில்வழி" கலி. 73 : 6.

4. (அ) "பிறவாம னல்கு பெரியோய்" கம்ப. நாகபாச. 258. (ஆ) "தற்பழி யாமலுஞ் சந்திர வாணன் றமிழ்த்தஞ்சைநங், கற்பழி யாமலுங் காரணமாக" தஞ்சை. 227. (இ) "என்சொல் வழுவுறாமல் வேண்டு மென்ன" வில்லி. பதினான்காம். 17. (ஈ) "வளைத்திழுத்துக் குட்டா மலுக்கு" தனிப்பாடல். என்பவற்றாலும் 'மல்' எதிர்மறைத் தொழிற்பெயர் விகுதியாய் வருதல் அறியலாகும்.

5. "பூப்போ லுண்கண் பொன்போர்த் தனவே" ஐங். 16.

(பிரதிபேதம்) 1 உரையாமை பெறு, 2 பசந்தனவென முற்றாக்குக, இயற்கை நலத்தை யிழந்த அக்கண்ணெனச்சுட்டாக்கியுரைக்க. நின்னால்,3 பெறின் அக்கண் துயில்பெறுதலை, 4 தவிராரேயென்க மாசற.