பசந்தனவென முற்றாக்குக. இயற்கை நலத்தையும் இழந்த அக்கண் ணெனச் சுட்டாக்கி உரைக்க. 16 | (1) மாசற (2) மண்ணுற்ற (3) மணியேசு மிருங்கூந்தல் (4) வீசேர்ந்து வண்டார்க்குங் கவின்பெறல் வேண்டேன்ம (5) னோய்சேர்ந்த திறம்பண்ணி நின்பாண னெம்மனை நீசேர்ந்த வில்வினாய் வாராமற் பெறுகற்பின் |
எ - து: நின்னுடைய பாணன் (6) நோவுசேர்ந்த திறப்பண்ணைப்பண்ணி எம்முடைய மனையிடத்தே நீ சென்று சேர்ந்த பரத்தையர் மனையை என்னைக் கேட்டு வாராதிருத்தலை யான் பெறின், மாசறக் கழுவுதலுற்ற நீலமணியை நீ எனக்கு ஒவ்வாயென்று ஏசுங் கரியகூந்தல் பூவணிந்து வண்டுகள் ஆரவாரிக்கும் அழகைப்பெறுதலை யான் விரும்பேன்; அதனாற் பெற்றதென்? அவன் வினாவுதலைத் தவிரானே. எ- று. எம்மனை, 1வேண்டேனென்ப, ஒருமைப்பன்மைமயக்கம். ஆங்க, அசை.
1. "நெய்யொடு துறந்த மையிருங் கூந்தன், மண்ணுறு மணியின் மாசற மண்ணிப் புதுமலர் கஞல" புறம். 147 : 6 - 8. 2. "மண்ணார் மணியின் வணர்குரல் வண்டார்ப்ப" பரி. 10 : 89. 3. "அணிக்கயிற் றவழ்ந்த மணிக்குர லைம்பால்" "நீல மாமணி நிமிர்ந்தி யன்றன்ன, கோலங்கொண்ட குறுநெறிக் கூழை" "மணியிருங் கூந்தல்" பெருங். (1) 40 : 158; (2) 15 : 90 - 91. (3) 9 : 153. 4. (அ) "அருந்துய ருழக்குநின் றிருந்திழை யரிவை, கலிமயிற், கலாவங் கால்குவித் தன்ன, வொலிமென் கூந்தற் கமழ்புகை கொளீஇத், தண்கமழ் கோதை புனைய" (ஆ) "புணர்ந்தோர் பூவணி யணிய" புறம். 146 : 7 - 10; 194 : 3. (இ) "பெறுக நின் செவ்வி பெருமகன் வந்தா,னறுமலர்க் கூந்த னாளணி பெறுகென" சிலப். 27 : 215 - 216. எனவும் (ஈ) "போதில் வறுங் கூந்தல்" கலி. 80 : 23. (உ) "தன்னவன் றணந்த காலைப், பூமனும் புனைதலின்றி" சீவக. 1598. எனவும் வருவன இங்கு அறிதற்பாலன. 5. "நோய் சேர்ந்த....................பெறுகற்பின்" என்பது கற்பின்கண் மடந்தப வுரைத்தலென்னும் மெய்ப்பாட்டிற்கும் (தொல். மெய்ப். சூ. 19. பேர்.) ஊடலுக்கும் (தொல். செய். 187. பேர், நச்.) மேற்கோள். 6. பரி. பதின்மூன்றாம்பாடலின்பண் நோதிறமென்றிருத்தலும் சிலப். 4 : 75. "பாண்வாய் வண்டு நோதிறம்பாட" என்றிருத்தலும் இங்கு கருதற்பாலன. (பிரதிபேதம்) 1வேண்டேனென்பது.
|