ஊதுந் துணையைப்புணர்ந்த கரிய தும்பி பலரும் நீர் உண்ணுந் துறையில் அலர்ந்த பூவைப் பெருகிவந்த நீர்சாயப்பண்ணுகையினாலே அப்பூவிலிருத்தலை வெறுத்து 1 அப்புனலுடனே ஊடி நற்குணங்களையுடைய நல்ல நாட்டிற்கு உரிய பகை தம்மிடத்தே வந்ததாக அந்நாட்டை 2இருப்பல்லவென்று கைவிட்டு நீங்கிப் போய்த் தன்னாட்டைக் காக்கின்றவனுடைய குடைநிழலிலூர்களை இருப்பாக நி்னைத்துத் தங்குதல் கொள்ளுங் குடிமக்களைப்போல வேறுமொரு பொய்கையைத் தனக்கு இருப்பாக ஆராய்ந்திருந்து பழைய பொய்கையை நினைத்துச் சுழல்கின்ற காலத்தே 3அவ்விறைவன் வந்தபகையின் வலிகெடும்படியாக அப்பகையைப்போக்க அக்குடிமக்கள் பதியிடத்தே மீண்டு சென்றாற்போல அந்நிலத்துள்ளார் போக்க அப்பெரும்புனல் நீங்கு கையினாலே 4மீண்டுவந்து அத்தும்பி அந்தத் தாமரைப்பூவிலே பறத்தலைத் தவிர்ந்து இளைப்பாறும் பரந்த புனலையுடைய நல்ல 5ஊரனே ! எ - று. பகைதலைவந்தென இறைகொள்ளுங் குடிபோலத் தும்பி ஊடித்தேர்ந்து அலமரும்பொழுதிலே அவ்விறை பகைதனிப்ப அக்குடி பதிப் 6பெயர்ந்தாற் போலே புனனீங்க மீண்டுவந்து அத்தும்பி அம்மலரிலே அசைவிடும் ஊர என்றதனாற் பல பரத்தையரையுடைய பரத்தையர் சேரியிலே சிலநாள் ஒரு பரத்தையை ஆரவாரத்துடனே நீ வதுவையயர அவளை நின் காதற்பரத்தை வந்து கோபித்துத் தீங்கு கூறுகையினாலே வதுவையயர்ந்தவளிடத்துக் கூட்டத்தையும் வெறுத்துக் காதற்பரத்தையொடும் ஊடி வேறோர் பரத்தையர் சேரியிலே சென்றிருந்து நீ வதுவையயரந்தவளை நினைத்து 7வருந்துகின்ற காலத்தே அவள் சுற்றத்தார் காதற்பரத்தை கோபத்தை நீக்க மீண்டு சென்று அவளிடத்தே தங்குகின்றாயெனக் காமக்கிழத்தி புலந்து கூறினாள். இது வினையுவமப்போலி. ஏனையுவமமும் வினையுவமம். 11 | (1) நீங்குங்கா னிறஞ்சாய்ந்து புணருங்காற் புகழ்பூத்து நாங்கொண்ட குறிப்பில ணலமென்னுந் தகையோதா னெரியிதழ் சோர்ந்துக (2) வேதிலார்ப் புணர்ந்தமை கரிகூறுங் கண்ணியை யீங்கெம்மில் வருவதை |
'ஞெமர்தலும்' தெய். (ஆ)வினையியலுள் ஓதாமையாற் பெயரெச்ச உம்மை இடைச்சொலென்று கொள்ளப்படும். பாயும் புனலென்பது பாய்புனலெனத் தொக்குழி வேற்றுமைப்பொருட்கண் உருபு பெயர் நிற்பத்தொக்க வாறுபோல வினை நிற்ப உருபு தொகுதலானும் செய்யுமென்பது வினையு முருபுமாகிய இரு நிலைமைத்தென்று கொள்க. என்பர் தெய்; தொல். இடை. சூ. 7. 'எச்சஞ்' 1. கலி. 38. இன்தாழிசைகள் ஈண்டு அறிதற்பாலன. 2. கலி. 79: 17 - 18. அடிகள் ஒப்புநோக்குக. (பிரதிபேதம்) 1அப்புனலுடனே நற்குணங்களை, 2விருப்பல்ல, 3அவ்விறைவந்த, 4மீண்டு வந்தவத்தும்பி, 5ஊரவென்க பகை, 6பெயர்ந்தாய்போலே, 7வருகின்றகாலத்தே
|