பக்கம் எண் :

மூன்றாவது மருதம்465

எ - து: எரிபோலும் நிறத்தையுடைய இதழ்கள் வாடி உதிரப் பரத்தை யரைப் புணர்ந்தபடியைச் சான்றாய் எமக்குக் கூறுங் கண்ணியையுடையையாய் எம்முடைய இல்லில் யாமிருக்கின்ற இடத்தே வருகின்ற நிலைமை இவளுடைய 1நலம் யாம் பிரியுங்காலத்து நிறங்கெட்டுப் புணருங்காலத்துப் பிறர் புகழ்தல் பொலிவுபெற்று நாம் மனத்திற் கொண்ட கருத்தாயிருக்குமென்று நீ குறித்திருக்குந் தகைமைப்பாடோதான். எ - று.

15 (1) சுடர்நோக்கி மலர்ந்தாங்கே படிற்கூம்பு மலர்போலென்
றொடர்நீப்பிற் றொகுமிவ ணலமென்னுந் தகையோதா
னலர்நாணிக் கரந்தநோய் கைம்மிகப் பிறர் (2) கூந்தன்
மலர்நாறு மார்பினை யீங்கெம்மில் வருவதை

எ - து: பிறர் கூறும் அலருக்கு நாணி மறைத்த காமநோய் ஒழுக்கத் தெல்லையைக் கடவாநிற்கப் பிறர் கூந்தலின் மணம் நாறுகின்ற மார்பினை யுடையையாய் எம்முடைய இல்லிலே 2யாமிருக்கின்ற இடத்தே வருகின்ற 3நிலைமை இவள் நலம் ஆதித்தனைக் கண்டு அலர்ந்ததாமரைப்பூ அந்த ஆதித்தன் அடங்குமளவிற் குவிந்தாற்போல 4எனது தொடர்ச்சி நீங்கின் வறிதுபட்டிருக்குமென்னுந் தகைமைப்பாடோதான். எ - று.

19 (3) பெயினந்தி வறப்பிற்சாம் புலத்திற்குப் பெயல்போல்யான்
செலினந்திச் செறிற்சாம்பு மிவளென்னுந் தகையோதான்


1. (அ) "கொழுநனைக் காணா,........................அவன் வடிவெலா நோக்கித், தெள்ளுதெண் டிரைசூழ் பொலங்கிரி முகட்டிற் சேட்டிளம்பரிதிகண்டாங்கே, முள்ளரை முளரி முறுக்கவிழ்ந் தென்ன முகமலர்ந் தகமலர்ந் தனளே" பிரமோத்தர. உமாமகேசுவரபூசாபல. 52. (ஆ) "தணந்த வென் கணவன் வல்லே சார்தர வருளு கென்னாப், பணந்தழை யரவ மாலைப் பகவனைக் கரங்கள் கூப்பு, மணந்தவழ் கமல மென்றூழ் வருதலுந் தழுவி மார்பம், புணர்ந்திடக் கூப்புங் கைகள் பொருக்கென விடுத்து நின்ற" பேரூர்ப். குழகன் குளப்புச் சுவடுற்ற. 55.

2. (அ) "சாந்த நாறு நறியோள், கூந்த னாறுநின் மார்பே தெய்யோ" ஐங் 240. (ஆ) "வேந்த, னெரிமணி யார மார்பி னின்றுயில் பொருந்தினாளே" நைடதம். மண. 46.

3. (அ) "வறனுழக்கும்பைங்கூழ்க்கு வான்சோர்வினிதே" இனியது. 16. (ஆ) "துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்த, னளியின்மை வாழுமுயிர்க்கு" குறள். 557. என்பவையும். (இ) "வையெயிற் றெய்யா மகளிர் திறமினிப்பெய்ய வுழக்கு மழைக்காமற் றைய" பரி. 9: 33-34. என்பதும் அதனுள் 'மழைக்கா'என்பதனை விளக்குமிடத்து,

(பிரதிபேதம்) 1நலம்பிரியுங், 2யானிருக்கின்றவிடத்தே, 3நிலைமை, ஆதித்தணைக், 4நினது.