பக்கம் எண் :

466கலித்தொகை

(1) முடியுற்ற கோதைபோல் யாம்வாட வேதிலார்
(2)தொடியுற்ற வடுக்காட்டி யீங்கெம்மில் வருவதை

- து: முடியிலே பொருந்தும் மாலைபோல யாம் வாட நின் பரத்தையரது தொடியினாலுற்ற வடுவினைக் காட்டி இவ்விடத்து எம் இல்லிலே 1யாமிருக்கின்ற இடத்தே வருகின்றநிலைமை இவள் மழைபெய்யிற் செருக்கி அது பெய்யாதொழியிற் புலர்கின்ற நிலத்திற்கு (3) 2அப்பெயல் பெய்து விளைவித்தும் பெய்யாது கெடுத்தும் போமாறுபோல யான் சென்றேனாயிற் செருக்கிச் செல்லாமல் வருத்திற் கெடுமென்று நீ குறித்திருக்குந் தகைமைப் பாடோதான். எ - று.

3ஆங்க, அசை.

24 ஐய வமைந்தன் றனைத்தாகப் புக்கீமோ
(4) வெய்யாரும் 4வீழ்வாரும் வேறாகக் கையின்
முகை 5மலர்ந் தன்ன 6முயக்கிற் றகையின்றே
தண்பனி வைக லெமக்கு

"காவையொத்தலாவது: கா, தனக்கு இன்றி யமையாத மழையை வருவித்துக்கொள்ள மாட்டாது அது தானேவந்துழிப் பொலிந்து வாராதவழியும் ஆமளவும் ஆற்றி ஆகாதஎல்லைக்கண் இறந்துபடுதல்"என்றெழுதி யிருத்தலும் இங்கே அறிதற்பாலன.

1. (அ) "சேக்கை யாகி மலர்ந்தசெந் தாமரைப், பூக்கள் பட்டதப் பூவையும் பட்டனள்" (ஆ) "அரக்கர்,........................புறத்தினோடின ரோடிய குருதியேபோல" (இ) "கரைவித்தா னுயிரைக் கண்போல்" கம்ப. மிதிலைக். 79 : கும்பகருணப். 226. நாகபாச. 210. (ஈ) "நின்னிடை யெனத்தா, மெய்வண்ணம்வாடி" தஞ்சை. 120.(உ) "மாலை யென வேதுவளுறும்" விநாயக.

2. "தொடிவடு" கலி. 71 : 16. இன் குறிப்புப் பார்க்க.

3. "கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே,
யெடுப்பதூஉ மெல்லா மழை" குறள். 15.என்பதும் அதன் பரி உரையும் இங்கே அறிதற்பாலன.

4. "உள்ள துவர்த்த லென்பதற்கு உள்ளதனை உவர்த்துக்கூறுதலென்று பொருள் கூறி 'வெய்யாரும்...................லெமக்கு' என்பதை மேற்கோள் காட்டி இது தலைவன் செய்கின்ற தலையளியை வெறுத்த லென்பர் இளம்; தொல். மெய்ப்பாட். சூ. 24.

(பிரதிபேதம்) 1யானிருக்கின்றவிடத்தே, 2அப்பெயல்கள் பெய்து, 3ஆங்கசை, 4விள்வாகும், 5அலர்ந்தன்ன, 6முயங்கிற்.