பக்கம் எண் :

மூன்றாவது மருதம்467

எ - து: நும் பரத்தைமையாற் பலரும் வியக்கத்தக்கன எல்லாம் நுமக்குப் பொருந்திற்று; (1) நும்மைவிரும்புவாரும் நீர்தாம் விரும்புவாருமாகியபரத்தையரும் உமக்கு வேறுபடும்படியாக ஈண்டு நில்லாதே அவர் மனைக்கண்ணே செல்வீராக; தன் செவ்வியான் அலராது கையினாலே வலிய அலர்த்துதலின் முகையலர்ந்தாற்போல இனிதல்லாத முயக்கத்தில் எமக்குக் குளிர்ந்த பனிக் காலம் அப்படிக் கொடிதாயிருக்க நும்மையின்றித் தங்குதல் தகைமையில்லையோ அது தகைமையுண்டோவென ஊடல்தீர்கின்றாள் 1கூறினாள். எ - று.

தண்பனி அனைத்தாகவென்க.

இது கைம்மிகலும் 2இழிவுமென்னும் மெய்ப்பாடுகள் உணர்த்திற்று.

இது தரவும் தாழிசையும் 3அசைநிலையாகிய அடைநிலைக்கிளவியும், வெள்ளைச்சுரிதகமும் பெற்ற ஒத்தாழிசைக்கலி. (13)

(79.) (2) புள்ளிமி ழகல்வய லொலிசெந்நெ லிடைப்பூத்த
முள்ளரைத் தாமரை முழுமுதல் சாய்த்ததன்
வள்ளித ழுறநீடி வயங்கிய வொருகதி
ரவைபுக ழரங்கின்மே லாடுவா ளணிநுதல்
வகைபெறச் செரீஇய வயந்தகம் போற்றோன்றுந்
தகைபெறு கழனியந் தண்டுறை யூரகேள்;
7அணியொடு வந்தீங்கெம் புதல்வனைக் கொள்ளாதி
மணிபுரை செவ்வாய்நின் மார்பகல நனைப்பதாற்
றோய்ந்தாரை யறிகுவேன் யானெனக் கமழுநின்
சாந்தினாற் குறிகொண்டாள் சாய்குவ ளல்லளோ ;
11 புல்லலெம் புதல்வனைப் புகலக னின்மார்பிற்
பல்காழ்முத் தணியாரம் பற்றினன் பரிவானான்
மாணிழை மடநல்லார் முயக்கத்தை நின்மார்பிற்
பூணினாற் குறிகொண்டாள் புலக்குவ ளல்லளோ;
15 கண்டேயெம் புதல்வனைக் கொள்ளாதி நின்சென்னி
வண்டிமிர் வகையிணர் வாங்கினன் பரிவானா

1. "நின்வெய்ய னாயி னவன்வெய்யை நீயாயின்" கலி. 107:21.

2. ஏனையவாயில்களை மறுத்தவழி இன்னகைப் புதல்வனைத்தழீஇ இழையணிந்து அவன் வாயிலாக வந்ததற்கு இச்செய்யுள் மேற்கோள்; தொல். கற்பி. சூ. 10. இளம்.

(பிரதிபேதம்) 1கூறியது தண்பனி, 2இழவுமென்னும், 3இசைநிலையாகிய இடைநிலைக்.