பக்கம் எண் :

468கலித்தொகை

னண்ணியார்க் காட்டுவ திதுவெனக் கமழுநின்
கண்ணியாற் குறிகொண்டாள் காய்குவ ளல்லளோ;
எனவாங்கு;
20 பூங்கட் புதல்வனைப் பொய்பல பாராட்டி
நீங்கா யிகவாய் நெடுங்கடை நில்லாதி
யாங்கே யவர்வயிற் சென்றீ யணிசிதைப்பா
னீங்கெம் புதல்வனைத் தந்து.

இது செல்லாக் காலைச் 1செல்கெனக்கூறிவிடுத்தது. (1) அதுதலைவன் இனிச் செல்லானென்பது இடமுங் காலமும்பற்றிஅறிந்த காலத்து ஊடலுள்ளத்தாற் கூடப் பெறாதாள் செல்கெனக்கூறி விடுத்தாற்றுதலாம்.

இதன் பொருள்.

புள்ளிமி ழகல் (2) வய லொலிசெந்நெ லிடைப்பூத்த
முள்ளரைத் தாமரை முழுமுதல் சாய்த்ததன்
வள்ளித ழுறநீடி வயங்கிய வொருகதி
ரவைபுக ழரங்கின்மே லாடுவா ளணிநுதல்
வகைபெறச் செரீஇய 2வயந்தகம் போற்றோன்றுந்
தகைபெறு கழனியந் தண்டுறை யூரகேள்

எ - து:பறவைகள் ஒலிக்கின்ற அகன்ற வயலிடத்து (3)ஒலிக்கின்ற செந்நெலிடையிலே பூத்த முள்ளை அரையிலேயுடைய தாமரையை ஒன்றாகிய செந்நென் முதல் 3சாய்க்கையினாலே அதனுடைய வள்ளிய இதழையுறும்படி வளர்ந்து அப்பூவிலே கிடந்து விளங்கின ஒரு கதிர் அவையினுள்ளார் புகழப்பட்ட அரங்கின்மேலே ஆடுகின்றவளுடைய தலைக்கோலத்தினின்று நுதலிலே


1. தொல். கற்பி. சூ. 6. இதனுரையில் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் செல்லாக்காலைசெல்கென விடுத்தற்கு, "பூங்கட் புதல்வனை........................தந்து" என்பதனை மேற்கோள் காட்டி யுள்ளார்.

2. (அ) "செந்தா மரைப்பூ வுறநிமிர்ந்த செந்நெலின், பைந்தார்ப் புனல் வாய்ப்பாய்ந் தாடுவா-ளந்தார், வயந்தகம்போற் றோன்றும் வயலூரன்" திணைமாலை. 128. (ஆ) "கரும்பணி வளவயற் காமர் தாமரை,
வரம்பணைந் ததனுதற் கிடந்த வார் செநெ, லரங்கணி நாடக மகளி ராய் நுதற், சுரும்புசூ ழிலம்பகத் தோற்ற மொத்ததே". சீவக. 1442.

3. ஒலித்தல் - தழைத்தல்.

(பிரதிபேதம்) 1செல்கென விடுத்தது, 2வயந்தகமேபோற்றோன்றும், 3சாய்கையினாலே யிதனுடைய.