தாழும்படி ஒரு வடமாகச் செருகி வைத்த வயந்தகமென்னும் அணிபோலத் தோன்றும் அழகு பெறுகின்ற கழனியையுடைத்தாகிய அழகினையுடைய குளிர்ந்த துறையினையுடைய ஊரனே! கேள். எ - று. சாய்த்துவயங்கியவென முடிக்க. அணி - தலைக்கோலம். பரத்தையர் சேரியிற் பரத்தையரிடத்தே பொலிவுபெற்ற நின்னை அவர்கள் தம்வசமாகக் கொள்கையினாலே அவர்களில் ஒருத்தி நின்னிடத்தே விடாமற் றங்கி நினக்கு அணியாய்த் தோன்றாநின்றாளென உள்ளுறையுவமங் கொள்க. 7 | அணியொடு வந்தீங்கெம் புதல்வனைக் கொள்ளாதி (1) மணிபுரை செவ்வாய்நின் (2) மார்பகல 1நனைப்பதாற் (3) றோய்ந்தாரை 2யறிகுவேன் யானெனக் கமழுநின் சாந்தினாற் குறிகொண்டாள் சாய்குவ ளல்லளோ |
எ - து: பரத்தையரிடத்து அணிந்த அணியுடனே இவ்விடத்தே வந்து எம்புதல்வனைஎடாதேகொள்; அவனுடையமணியை ஒக்கின்ற சிவந்த (4) வாயினீர் நின் மார்பினுடைய பரப்பையெல்லாம் நனைக்கப்படுவதொன்றாய் இரா நின்றது; அஃது அங்ஙனம் நனைத்தால் யான் நின் மார்பின் முயங்கினாரை அறிவேனெனச் சொல்லிக் கமழ்கின்ற நின்னுடைய சந்தனத்தாலே பிறர் முயக்கத்தைத் தான் கருதுதலை மனத்தாற்கொண்டவள் வருந்துவளல்லளோ? எ- று. 11 | புல்லலெம் புதல்வனைப் 3புகலக (5) னின்மார்பிற் பல்காழ்முத் தணியாரம் பற்றினன் பரிவானான் |
1. (அ) "மணிபுரை செவ்வாய்" அகம். 66 : 14.(ஆ) "மணிமருளவ் வாய்" (கலி. 81 - 1.) என்பதும் அதன் குறிப்பும் பார்க்க. 2. (அ) "மலைமாதமரும் திருமார்பகலத், தீசன்" தேவாரம்.(ஆ) "உற்றவா யம்புதம் பரிசையுங் கருவியும், முருவிமார் பகலமு முருவிவீழ் செருநர்" கலிங்க. 482. 3. நற். 55 : 3 - 12. 4. (அ) "மணித்தகைச் செவ்வாய் மழலையங் கிளவி, புலர்த்தகைச் சாந்தம் புலர்தொறு நனைப்பக், காணா யாகலோ கொடிதே" தொல். கற்பி. சூ. 9. நச். மேற்கோள். (ஆ) "மைவார் குழன்மட மங்கையர் தங்கள் வதுவை யுன்னிக்கைவார ணங்கட வும்பெரு மானைக் கலுழ்ந்தழைத்துன், செவ்வா யமுத மளைந்து செஞ் சாந்தஞ் சிதையப்புல்லி, யிவ்வாறு செய்ததெல் லாமவர் மேனியி லேறுவதே" அம்பிகா. 503. 5. "நுந்தை வியன்மார்பிற்,....................கோதை பரிபாட" கலி. 80 : 24 - 6. (பிரதிபேதம்) 1நனைப்பயால், 2 அறிகுவல், 3 புகலலர் நின்.
|