பக்கம் எண் :

470கலித்தொகை

மாணிழை மடநல்லார் முயக்கத்தை நின்மார்பிற்
(1) பூணினாற் குறிகொண்டாள் புலக்குவ ளல்லளோ

எ - து: எம் புதல்வனை நீ தழுவாதேகொள்; பரத்தையர் கொண்டாடு தலையுடைத்தாகிய நின்னுடைய அகன்ற மார்பிற் கிடக்கின்ற பல வடங்களையுடைத்தாகிய முத்து அணிந்த ஆரத்தைப் பிடித்து அறுப்பானொருவனாய் இராநின்றான்; அவன் அறுத்தால் மாட்சிமைப்பட்ட இழையினையும் மடப்பத்தினையுமுடைய மகளிர் முயங்கின முயக்கத்தை நின் மார்பிற் கிடக்கின்ற பூணாலே கருதுதலை மனத்தாற்கொண்டவள் புலப்பளல்லளோ? எ - று.

15 கண்டேயெம் புதல்வனைக் கொள்ளாதி நின்சென்னி
வண்டிமிர் வகையிணர் வாங்கினன் பரிவானா
(2) னண்ணியார்க் காட்டுவ திதுவெனக் கமழுநின்
கண்ணியாற் குறிகொண்டாள் காய்குவ ளல்லளோ

எ - து: எம் புதல்வனைத் தேடி எடுத்துக்கொள்ளாமல் அவன்தானேவரக் கண்டு எடாதேகொள்; நின்னுடையத்தலையில்வண்டுகள் ஒலிக்கின்ற கூறுபாட்டையுடைய பூங்கொத்திற் பூக்களை வாங்கி அம்மாலையை அறுப்பானொருவனாய் இராநின்றான்; அவன் அறுத்தால் நின்னை முயங்கினவர்களை அறிவிப்பது இக்கண்ணியென்று கூறி மணக்கின்ற நின்கண்ணியாலே பிறர்முயக்கத்தைத் தான் கருதுதலை மனத்தாற்கொண்டவள் கோபிப்பளல்லளோ? எ - று.

1எனவாங்கு, அசை.

20 (3) பூங்கட் புதல்வனைப் பொய்பல பாராட்டி
நீங்கா யிகவாய் நெடுங்கடை நில்லாதி
யாங்கே யவர்வயிற் 2சென்றீ யணிசிதைப்பா
னீங்கெம் புதல்வனைத் தந்து

எ - து: பூப்போலுங் கண்ணினையுடைய புதல்வனைப் பல பொய்களைச் சொல்லிப்பாராட்டிப்புதல்வனைவிட்டுப் போகாயாய்ப்பரத்தையர் குறிக்கொண்ட நிலைமையைக் கடவாயாய்ப் பெரிய வாயிலில் நில்லாதேகொள்; நின்றால்


1. "ஒளிபூத்த நுதலாரோ டோரணிப் பொலிந்தநின், களிதட்ப" (கலி, 66: 19 - 20) என்பதும் அதனுரையும் அதன் குறிப்பும் பார்க்க.

2. கலி. 78 : 13 - 14.

3. (அ) "வாயிலின் வரூஉம் வகைகளுட் புதல்வனைவாயிலாக்கொண்டு சென்றதற்கு, "பூங்கட்...................பாராட்டி" என்பது மேற்கோள்; தொல். கற்பி. சூ. 6. நச். (ஆ) "பூங்கட் புதல்வனை நோக்கி" அகம். 66 : 12. (இ) "பூங்கட் புதல்வன்" ஐந் - யெழு. 47.

(பிரதபேதம்) 1ஆங்கசை பூங்கட், 2 சென்றி.