| யுய்வின்றி நுந்தை நலனுணச் சாஅய்ச்சாஅய்மா ரெவ்வநோ யாங்காணுங் கால்; | 18 | ஐய, திங்கட் குழவி வருகென யானின்னை யம்புலி காட்ட லினிதுமற் றின்னாதே நல்காது நுந்தை புறமாறப் பட்டவ ரல்குல்வரி யாங்காணுங் கால்; | 22 | ஐயஎங்; காதிற் கனங்குழை வாங்கிப் பெயர்தொறும் போதில் வறுங்கூந்தற் கொள்வதை நின்னையா னேதிலார் கண்சாய நுந்தை வியன்மார்பிற் றாதுதேர் வண்டின் கிளைபாடத் தைஇய கோதை பரிபாடக் காண்கும். |
இதுபரத்தையிற்பிரிந்து வந்த தலைவன் சிறைப்புறத்தானாகத்தலைவி மகனுக்கு உரைத்தது. இதன் பொருள். | நயந்தலை மாறுவார் மாறுக மாறாக் (1) கயந்தலைமின்னுங் கதிர்விடு 1முக்காழ்ப் பயந்தவெங்கண்ணார யாங்காண நல்கித் 2திகழொளிமுத்தங் கரும்பாகத் தைஇப் | 5 | (2) பவழம் 3புனைந்த பருதி சுமப்பக் கவழமறியாநின் (3) கைபுனை வேழம் புரிபுனை 4பூங்கயிற்றிற்பைபய வாங்கி |
1. (அ) "கைபுனை முக்காழ் கயந்தலை தாழ" கலி. 86 : 2. (ஆ) "மயிர்ப் புறஞ் சுற்றிய கயிற்கடை முக்காழ், பொலம்பிறைச் சென்னி நலம் பெறத் தாழ" மணி. 3 : 135 - 136. 2. (அ) "கவழக் களியியன்மால் யானைசிற் றாளி, தவழத்தா னில்லாதது போற் - பவழக், கடிகை யிடைமுத்தம் காண்டொறு நில்லா''திணைமாலை. 42. (ஆ) "பவழமே யனையன பன்மயிர்ப் பேரெலியகழுமிங் குலிகமஞ் சனவரைச் சொரிவன,கவழயா னையினுதற் றவழுங்கச் சொத்தவே" சீவக. 1898. (இ) "பவழவரை யன்னதிர டோட்பரவை மார்பன், றவழுமணி யாரமொடு தார்மணி தயங்கக், கவழமனை மேவு களி யானையென வந்தாங்கு'' சூளா. துறவுச். 191. என்பவற்றால்,பவழம்கவழமென்னும் வழக்குண்மை அறியலாகும். 3. "கை புனைவேழம்................வந்தீக" கலி. 86 : 7 - 10. (பிரதிபேதம்) 1முக்காழ்பயந்த, 2திகளொளி; 3புனைந்து, 4பூங்கையிற்புடையுடையவாங்கி.
|