யரிபுனை புட்டிலி 1னாங்கணீர்த் தீங்கே வருகவெம் பாக மகன் எ - து: நின்னிடத்து அன்பு ஒழிவார் ஒழிந்தேபோக; நின்னைப் பெற்ற எம்முடைய கண்ணிறைய அன்பு மாறாத 2யான் நின் வரவைக் காணும்படி அருளி மென்மையையுடைய தலையிடத்தே கிடந்து மின்னும் ஒளிவிடுகின்ற மூன்று வடத்தையுடைய பாகனாகிய மகன்! விளிம்பிடத்தே விளங்குகின்ற ஒளியையுடைய முத்தை அரும்பாக அழுத்திப் பவழத்தாற்செய்த வட்டப் பலகை சுமந்துநிற்ப நின்ற கவழத்தைக் கொள்ளுதலறியாத கையாற் புனைந்த வேழத்தை 3நின்னுடையகாலிற் கட்டின உள்ளிடுமணியாற் புனைந்த கெச்சையாலே (யாரவாரிப்ப) நீ வளைத்து முப்புரியாக முறுக்கினகயிற்றாலே 4பையப் பைய ஈர்த்து இங்கே வருவாயாக. எ - று. கயந்தலை, வல்லெழுத்து மிகுவழி மெலிப்பொடுதோன்றியது. (1) மகனென்றது, இயல்புவிளி. 10 | கிளர்மணி யார்ப்பார்ப்பச் சாஅய்ச்சாஅய்ச் செல்லுந் (2) தளர்நடை 5காண்ட லினிதுமற் றின்னாதே யுளமென்னா நுந்தைமாட் டெவ்வ முழப்பார் வளை 6நெகிழ் பியாங்காணுங் கால் |
எ - து: விளங்கின மணிகள் ஆரவாரிப்ப ஆரவாரிப்ப அசைந்தசைந்து நடக்குந் தளர்ந்த நடையைக் கண்டு மகிழ்ந்திருத்தல் எமக்கு இனிது; அஃதொழிந்து நுந்தையிடத்து எங்கள்உள்ளமென்று கூறி வளைநெகிழாநின்று வருத்தத்திலே தங்கும் மகளிரை யாங் காணுமிடத்து அக்காட்சி இன்னாது. எ - று. மற்று, வினைமாற்று. இது (3) நின் தந்தையாலுற்ற வருத்தம் நீங்குதற்கு நின்னைக்கொண்டு பொழுதுபோக்குவேமென்பது போதர நின்றது. மேல் வருவனவும் அன்ன.
1. தொல். தொகை. சூ. 15. கயந்தலை, பண்புத்தொகையென்பது சிலர் கருத்து. 2. (அ) "தேரோடு, தளர்நடைப் புதல்வனை யுள்ளி"(ஆ) "சிறுதே ருருட்டுந் தளர்நடை" ஐங். 66, 403.(இ) "குழவி தளர்நடையைக் காண்ட லினிதே" இனியது. 15.(ஈ) "தளர்நடை தாங்காக் கிளர் பூட் புதல்வரை" மணி. 3 : 141. 3.இந்நூற்பக்கம் 434 : 4 - ஆம் குறிப்புப்பார்க்க. (பிரதிபேதம்) 1ஆங்கனிந்திங்கே, 2யானினி, 3நின்காலிற், 4பெயரவிழுத்துஇங்கே, 5கண்டலினிது, 6நெகிழ்ப்பியாம்.
|