பக்கம் எண் :

மூன்றாவது மருதம்475

இஃது (1) ஒப்புவழியுவத்தல்; காமருநோக்கு இனிதென்றலின்.

18 ஐய, திங்கட் குழவி வருகென யானின்னை
(2) யம்புலி காட்ட லினிதுமற் றின்னாதே
(3) நல்காது நுந்தை புறமாறப் பட்டவ
1ரல்குல்வாரி யாங்காணுங் கால்

எ - து; ஐயனே! திங்களாகிய குழவீ! நீ இவனுடனே விளையாடும்படி வருவாயாகவென்று கூறி அவ்வம்புலிக்கு யான் நின்னைக் காட்டி மகிழ்தல் எமக்கினிது. அஃதொழிந்து நுந்தை அருளாதே தனக்குப் புறஞ்சொல் உண்டாக அருளைக்கைவிடப்பட்ட மகளிருடைய அல்குலிற் பசப்பொழுங்கை யாங் காணுமிடத்து அக்காட்சி இன்னாது. எ - று.

(4) உயர்திணைமருங்கின் ஒழிந்துஞ்சிறுபான்மைவருமென்றலின் 2எவ்வ முழப்பார் நலனுணப்பட்டாரென இரண்டாவது விரியாதுநின்றது.

22 ஐயஎங்!, காதிற் கனங்குழை வாங்கிப் பெயர்தொறும்
(5) போதில் வறுங்கூந்தற் கொள்வதை நின்னையா
மேதிலார் கண்சாய (6) நுந்தை வியன்மார்பிற்

1. (அ) "காமரு நோக்கினை யத்தத்தா வென்னுநின், றேமொழி கேட்ட லினிதுமற் றின்னாதே, என்பது ஒப்புவழி யுவந்தது; என்னை? காமரு நோக்கினை யென்றமையின்" என்ற குறிப்பு தொல். மெய்ப். சூ. 22. பேராசிரிய ருரையிற் காணப்படுகின்றது. (ஆ) இ - வி. நூலாரும் இதனையே பின்பற்றுவர். இ - வி. சூ. 580. (இ) "தந்தைய ரொப்பர் மக்கள்" (தொல். கற். சூ. 6.) (ஈ) "நின்னோ ரன்ன நின் புதல்வர்" புறம். 198 : 14. என்பவையும்., (உ) "புதல்வனை............................செத்தனள்பேணி" (அகம். 16 : 5 - 8.) என்புழி, 'செத்து, ஒப்புமாம்; ஒப்பு - தலைவனை யொப்பு'என்று எழுதியிருக்கும் உரையும் இங்கே அறிதற்பாலன.

2. (அ) நாலாயிரதிவ்யப்ரபந்தம் பெரியாழ்வார் திருமொழி. முதற்பத்தில் 5-ஆவது 'தன்முகத்து' என்னும் தொடக்கத்த பாசுர முதலானவை இங்கே அறிதற்பாலன. (ஆ) "அங்கண் விசும்பி னகனிலாக் காண்பினிதே" இனியது. 10. (இ) "பிள்ளை களைமருட்டுந் தாயர்போ லம்புலிமே, லொள்ளிய காட்டு" பழ. 323.

3. "நல்காள்கண் மாறி விடின்" கலி. 61 :24.

4.தொல். தொகை. மரபு. சூ. 15. இள. நச். உரைபார்க்க.

5.இந்நூற்பக்கம் 460; 4-ஆம் குறிப்புப் பார்க்க. "பூவில் வறுந்தலை" குறுந். 19.

6. "புல்லலெம் புதல்வனைப் புகலக னின்மார்பிற்பல்காழ்முத் தணி யாரம் பற்றினன் பரிவானால்" கலி. 79 : 11 - 12.

(பிரதிபேதம்)1அல்குவாயாங், 2எவ்வமுழ்ப்பாரை நலனுணப்பட்டாரையென