11 | பெரும, விருந்தொடு கைதூவா வெம்மையு முள்ளாய் பெருந்தெருவிற் கொண்டாடி ஞாயர் பயிற்றத் திருந்துபு நீகற்ற சொற்கள்யாங் கேட்ப மருந்தோவா நெஞ்சிற் கமிழ்த மயின்றற்றாப் பெருந்தகாய் கூறு சில; |
16 | எல்லிழாய், சேய்நின்று நாங்கொணர்ந்த பாணன்சிதைந்தாங்கே வாயோடி யேனாதிப் பாடிய மென்றற்றா நோய்நாந் தணிக்கு மருந்தெனப் பாராட்ட வோவா தடுத்தடுத்தத் தத்தாவென் பான்மாண வேய்மென்றோள் வேய்த்திறஞ் சேர்த்தலு மற்றிவன் வாயுள்ளிற் போகா னரோ; |
22 | உள்ளி யுழையே யொருங்கு படைவிடக் கள்ளர் படர்தந் ததுபோலத் தாமெம்மை யெள்ளுமார் வந்தாரே யீங்கு; |
25 | ஏதப்பா டெண்ணிப் புரிசை வியலுள்ளோர் கள்வரைக் காணாது கண்டேமென் பார்போலச் சேய்நின்று செய்யாத சொல்லிச் சினவனின் னாணை கடக்கிற்பார் யார்; |
29 | அதிர்வில் படிறெருக்கி வந்தென் மகன்மேன் முதிர்பூண் முலைபொருத வேதிலாண் முச்சி யுதிர்துக ளுக்கநின் னாடை யொலிப்ப வெதிர்வளி நின்றாய்நீ செல்; |
33 | இனியெல்லாயாம், தீதிலே மென்று தெளிப்பவுங் கைந்நீவி யாதொன்று மெங்கண் மறுத்தர வில்லாயின் மேதக்க வெந்தை பெயரனை யாங்கொள்வேந் தாவா விருப்பொடு கன்றியாத் துழிச்செல்லு மாபோற் படர்தக நாம். |